கோவையில் குடிபோதையில் 12 வயது சிறுமியிடம் தகராறு செய்த வாலிபர்

சிறுமியையும் அவரது தந்தையையும் தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார். இதயைடுத்து சிறுமியின் தாய் காரமடை போலீசில் புகார் செய்தார்.
கோவையில் குடிபோதையில் 12 வயது சிறுமியிடம் தகராறு செய்த வாலிபர்
Published on

கோவை,

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சத்யா (வயது 32). இவர்களது வீட்டின் அருகே முருகேசன் (20) என்பவர் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று சத்யாவின் 12 வயது மகள் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த முருகேசன், சிறுமியிடம் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என கேட்டு தகராறு செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார். அவரது தாய் முருகேசனை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தகாத வார்த்தைகளால் பேசி சத்யாவை தாக்கினார். பின்னர் சிறுமியையும் அவரது தந்தையையும் தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

இது குறித்து சிறுமியின் தாய் காரமடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com