search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lorry collision"

    • லாரி நடந்து சென்று கொண்டிருந்த சக்திவேல் மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் இறந்தார்.

    ஈரோடு:

    கொடுமுடியை அடுத்த ஒத்தக்கடை தழுவம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (54). தச்சுத்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சாலைப்புதூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கரூரில் இருந்து மணல் லோடு ஏற்றி்க்கொண்டு முத்தூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்து. சாலைப்புதூர் ரோட்டில் லாரி வந்த போது நடந்து சென்று கொண்டிருந்த சக்திவேல் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் இறந்தார். இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து சக்திவேல் உடலை மீட்டு பிரதே பரிேசாதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பின்னால் வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் பொன்னுச்சாமி மற்றும் அவரது மனைவி சரோஜா படுகாயம் அடைந்தனர்.

    புளியம்பட்டி:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான் நகரை சேர்ந்தவர் பொன்னு ச்சாமி (வயது 74). இவரது மனைவி சரோஜா (70).

    இவர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் ேரயான் நகரில் இருந்து ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அடுத்த மல்லியம்பட்டிக்கு உறவினர் வீட்டு விஷேசத்துக்கு வந்து கொண்டி ருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் பு.புளியம்ட்டி சத்திய மங்கலம் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரே வந்த போது பின்னால் வந்த ஒரு மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பொன்னுச்சாமி மற்றும் அவரது மனைவி சரோஜா ஆகிய 2 பேருக்கும் தலை மற்றும் கை, கால்களில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இதை கண்ட பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக அன்னூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் பொன்னுச்சாமி வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

    மேலும் சரோஜாவுக்கு அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரும் இறந்து விட்டார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விபத்தில் இறந்த கணவன்- மனைவி ஆகிய 2 பேர் உடல்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படை க்கப்படுகிறது.

    • லாரி சிவசிதம்பரம் மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.
    • இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அந்தியூர்:

    அந்தியூர் மாவிளக்கு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவசிதம்பரம் (28). இவர் அந்தியூர்அடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். மேலும் திருமண நிகழ்ச்சிகளில் பீடா போடும் பகுதிநேர வேலையும் செய்து வந்தார்.

    இந்த நிலையில் சிவசிதம்பரம் சம்பவத்தன்று இரவு அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பீடா போடும் வேலையை முடித்து விட்டு அங்கிருந்து இரவு 10.30 மணி அளவில் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே வந்த போது கர்நாடக மாநிலத்தில் இருந்து சரக்கு ஏற்றி வந்து கொண்டிருந்த லாரி சிவசிதம்பரம் மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது. அதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி வந்து பார்வையிட்டார். மேலும் உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சிவசிதம்பரத்தின் தந்தை கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி மோதியதில் மொபட்டில் சென்ற மணியும், அவருடைய உறவினரும் கீழே விழுந்தனர்.
    • சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மணி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு, பிப். 21-

    ஈரோடு சூரம்பட்டி கிராமடை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 55). தொழிலாளி. இவர் தனது உறவினர் ஒருவருடன் மொபட்டில் ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    லாரி மோதி விபத்து

    அவர்கள் ஸ்டோனிபாலம் பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மோதியதில் மொபட்டில் சென்ற மணியும், அவருடைய உறவினரும் கீழே விழுந்தனர்.

    இதில் மணியின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மணி பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் மணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோ–தனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து லாரியின் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அவ்வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக லதா மணி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • இதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பவானி:

    அந்தியூர் தவிட்டுப் பாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி லதா மணி (30). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று லதா மணி தனது மொபட்டில் அந்தியூரில் இருந்து ஈரோடு செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டார்.

    பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக லதா மணி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து லதா மணியின் உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • திருமங்கலம் அருகே லாரி மோதி பெயிண்டர் பலியானார்.
    • இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள திருவாழவாயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் முனுசாமி (வயது 27). இவருக்கு திருமணமாகி மனைவி சுந்தரலட்சுமி, 1 மகன் உள்ளனர். இந்த நிலையில் முனுசாமி மற்றும் அவரது உறவினர் ஆறுமுகம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் விமான நிலைய பகுதியில் பெயிண்டிங் வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி, அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    காயம் அடைந்த ஆறுமுகம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான முனுசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோடு லக்கம்பட்டி பிரிவு அருேக சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி முத்துக்குமார் மீது மோதியது.
    • இந்த விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (27). எலக்ட்ரீசியன். இவர் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கரட்டடிபாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோடு லக்கம்பட்டி பிரிவு அருேக சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி முத்துக்குமார் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து இறந்து விட்டார்.

    விபத்தில் இறந்த முத்துக்குமாருக்கு ஜோதி புஷ்பம் என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இந்த விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி அவர் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் மாமாங்கலம் பகுதியில் நேற்றிரவு 30 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி அவர் மீது மோதியது. இதில் தூக்கி விசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் கருப்பூரை அடுத்த வெள்ளக்கல்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 48), இவர் நேற்றிரவு டால்மியா போர்டு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தூத்துக்குடியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற லாரி அவர் மீது மோதியது . இதில் லாரியின் முன் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ராஜா இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×