லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பலி

அவ்வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக லதா மணி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.இதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பலி
Published on

பவானி:

அந்தியூர் தவிட்டுப் பாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி லதா மணி (30). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று லதா மணி தனது மொபட்டில் அந்தியூரில் இருந்து ஈரோடு செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டார்.

பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக லதா மணி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து லதா மணியின் உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com