லாரி மோதி தொழிலாளி சாவு

லாரி மோதியதில் மொபட்டில் சென்ற மணியும், அவருடைய உறவினரும் கீழே விழுந்தனர்.சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மணி பரிதாபமாக இறந்தார்.
லாரி மோதி தொழிலாளி சாவு
Published on

ஈரோடு, பிப். 21-

ஈரோடு சூரம்பட்டி கிராமடை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 55). தொழிலாளி. இவர் தனது உறவினர் ஒருவருடன் மொபட்டில் ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

லாரி மோதி விபத்து

அவர்கள் ஸ்டோனிபாலம் பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மோதியதில் மொபட்டில் சென்ற மணியும், அவருடைய உறவினரும் கீழே விழுந்தனர்.

இதில் மணியின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மணி பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் மணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோ–தனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து லாரியின் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com