லாரி மோதி தொழிலாளி பலி

லாரி நடந்து சென்று கொண்டிருந்த சக்திவேல் மீது மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் இறந்தார்.
லாரி மோதி தொழிலாளி பலி
Published on

ஈரோடு:

கொடுமுடியை அடுத்த ஒத்தக்கடை தழுவம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (54). தச்சுத்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சாலைப்புதூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது கரூரில் இருந்து மணல் லோடு ஏற்றி்க்கொண்டு முத்தூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்து. சாலைப்புதூர் ரோட்டில் லாரி வந்த போது நடந்து சென்று கொண்டிருந்த சக்திவேல் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் இறந்தார். இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து சக்திவேல் உடலை மீட்டு பிரதே பரிேசாதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com