லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி

ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோடு லக்கம்பட்டி பிரிவு அருேக சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி முத்துக்குமார் மீது மோதியது.இந்த விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (27). எலக்ட்ரீசியன். இவர் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கரட்டடிபாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோடு லக்கம்பட்டி பிரிவு அருேக சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி முத்துக்குமார் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து இறந்து விட்டார்.

விபத்தில் இறந்த முத்துக்குமாருக்கு ஜோதி புஷ்பம் என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இந்த விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com