பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற வாலிபர் சிறையில் அடைப்பு

5 லிட்டர் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்
பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற வாலிபர் சிறையில் அடைப்பு
Published on

பு.புளியம்பட்டி,

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சத்தியமங்கலம் சாலையில் உள்ள நேருநகர் என்ற பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், 10 செல்போன்கள், 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான முத்துநகர் பகுதியை சேர்ந்த தனசேகர் (33) என்பவர் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு நேற்று மாலை வந்தார்.

அப்போது என் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு செல்போன், மோட்டார் சைக்கிளை பறித்து விட்டனர் என்று கூறி போலீஸ்தான் என் சாவுக்கு காரணம் என்று கூறியபடி தான் கொண்டு வந்திருந்த 5 லிட்டர் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் தனசேகர் மீது கொலை மிரட்டல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

கைதான தனசேகர் மீது புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் திருப்பூர் மாவட்டம் சேவூர் போலீஸ் நிலையங்களில் 12 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com