என் மலர்
நீங்கள் தேடியது "commits suicide"
- இளங்கோவன் வீட்டிற்கு அருகே உள்ள டையிங் பட்டறையில் வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
- சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அசோகபுரம் அய்யன்காடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (51). டெக்ஸ்டைல் நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இளங்கோவன் தற்போது ஈரோடு மாமரத்துப் பாளையம் சக்தி நகரில் மனைவி, மகன், மகளுடன் வசித்து வந்தார்.
இளங்கோவனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவரது பழைய நினைவுகளை மறந்து விட்டார். இதற்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று அதிகாலை இளங்கோவன் வீட்டிற்கு அருகே உள்ள டையிங் பட்டறையில் வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த இள ங்கோ வனின் குடும்பத்தி னர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு இளங்கோவன் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுபாஷ் சந்திரபோஸ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இச்சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கதிர்வேல் சித்தோடு போலீசில் புகார் செய்தார்.
பவானி:
சேலம் மாவட்டம் மேட்டூர் புங்கம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த வர் கதிர்வேல். இவரது மகன் சுபாஷ் சந்திர போஸ் (வயது 28). நடன பயிற்சியாளரான இவர் தற்போது சித்தோடு பகுதியில் உள்ள இந்திரா நகரில் வசித்து வருகிறார்.
கொளத்தூர் வால்குறிச்சி பகுதியைச் சேர்ந்த காவ்யா என்பவரை காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.
கடந்தாண்டு காவியா வெளிநாடு சென்று வந்ததிலிருந்து கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவ்வ ப்போது சுபாஷ் சந்திர போஸ் நான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் காவியா மீண்டும் வெளிநாடு செல்வ தாக தெரி வித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுபாஷ் சந்திரபோஸ் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் அவரின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கதிர்வேல் சித்தோடு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஜன்னல் வழியே பார்த்த போது சுந்தர்ராஜ் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிரு ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் (46). துணி வியாபாரி. கடந்த ஒரு வாரத்துக்கு முன் ஈரோடு வந்து நேரு வீதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.
நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறை திறக்கப்ப டவில்லை. அறையை தூய்மைபடுத்தும் தொழிலா ளர்கள் நீண்ட நேரம் கதவை தட்டி பார்த்தனர்.
பின்னர் ஜன்னல் வழியே பார்த்த போது சுந்தர்ராஜ் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிரு ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக லாட்ஜ் நிர்வாகத்தினர் இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
டவுன் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.
சுந்தர்ராஜன் எந்த காரணத்துக்காக தற்கொலை செய்து கொ ண்டார் என தெரியவில்லை. இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்ருதி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் ரகு வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார்.
- இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை வடவள்ளி அருகே உள்ள வி.என்.ஆர். நகரை சேர்ந்தவர் ரகு (வயது 39). டிரைவர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் மைசூரை சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற் பட்டது. இதனால் ஸ்ருதி தனது கணவரை பிரிந்து மைசூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். ரகு மைசூருக்கு சென்று தனது மனைவியை அடிக்கடி சென்று பார்த்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஸ்ருதி விவாகரத்து கேட்டு தனது கணவருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் ரகு கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் மனைவி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.
இதனை பார்த்து அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட ரகுவின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சோனுபரீத் (20)என்பவரும் தங்கி அதை ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
- தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஈரோடு,
சத்தீஸ்கர் மாநிலம் ஜனிஹீர் பகுதியை சேர்ந்தவர் டிஜோராம் (20). இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த ஈங்கூர் நல்லி கவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு ஆலையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
அவரது அறையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சோனுபரீத் (20)என்பவரும் தங்கி அதை ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கலந்த 10 நாட்களுக்கு முன்பு டிஜோராம் சத்தீஸ்கருக்கு சென்றார். அதன் பிறகு மீண்டும் தான் வேலை செய்யும் ஆலைக்கு வந்தார். சொந்த ஊர் சென்று திரும்பி வந்ததிலிருந்து நிஜோராம் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
அதன் பிறகு வேலைக்கு செல்லாமல் அறையிலேயே இருந்து வந்துள்ளார். இது குறித்த அவரிடம் கேட்டபோது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார்.
இந்நிலையில் நேற்று அறையில் உடன் இருந்த சோனுபரீத் வேலைக்கு சென்று விட்டார். அறையில் டிஜோராம் மட்டும் இருந்துள்ளார். மாலையில் வேலையை முடித்து கொண்டு சோனுபரீத் அறைக்கு வந்தபோது டிஜோராம் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிஜோராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நர்மதா பெகரா இரும்பு கம்பியில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார்.
- ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகின்றது.
சென்னிமலை:
ஒடிசா மாநிலம், மதுபூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் பெகரா. இவரது மனைவி நர்மதா பெகரா (30). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 10 மாத ஆண் குழந்தை உள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவர் ரஞ்சித் பெகரா மற்றும் இவரது தாயார் ஜீனுராணி, தங்கை பங்கஜனி பெகரா ஆகியோர் ஈங்கூர் எல்.ஐ.சி. காலனி, சக்திநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒடிசாவில் இருந்து மனைவி நர்மதா பெகரா தனது கைக்குழந்தையுடன் வந்து கணவர் ரஞ்சித் பெகரா மற்றும் மாமியாருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அனைவரும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் நர்மதா பெகரா தனது குழந்தையை பார்த்துக்கொண்டு வீட்டில் இருந்தார்.
வெளியே சென்றிருந்த கணவர் ரஞ்சித் மதியம் வீட்டிற்கு வந்த போது மனைவி நர்மதா பெகரா இரும்பு கம்பியில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு அவரை மீட்டு ஈங்கூர் தனியார் மருத்துமனைக்கு கொண்டு சென்று பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நர்மதா பெகரா இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு, ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகின்றது.
- வீட்டில் உள்ள ஒரு அறையில் மைதிலி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வாய்க்கால் மேடு கணேச புரம், சிங்கிரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மைதிலி (25). மைதிலி கடந்த 2016-ம் ஆண்டு திருப்பூரை சேர்ந்த கணேசன் என்ப வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் கணவரிடம் கோபித்து க்கொண்டு மைதிலி தாய் வீட்டுக்கு வருவது வழக்கம். பின்னர் கணேசன் சமாதா னப்படுத்தி மனைவியை உடன் அழைத்துச்செல்வார்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரண மாக கணவரை பிரிந்து மைதிலி தாய் வீட்டில் வசித்து வந்தார்.
மைதிலிக்கு சின்ன வயதில் இருந்தே கோபப்பட்டால் தலையை சுவற்றில் முட்டி கொள்வது வழக்கம். இதனால் அவருக்கு தலைவலி இருந்து உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மைதிலிக்கு மீண்டும் தலைவலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் உறவினர் ஒருவ ருக்கு போன் செய்து மைதிலியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு அவரது தாய் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார்.
பின்னர் அவரது உறவினர் மைதிலி வீட்டுக்கு வந்தபோது வீட்டில் உள்ள ஒரு அறையில் மைதிலி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் பிரகாசம் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
- இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி தமிழ் நகரை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 42). இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கும் இடை யே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சங்கீதா அவரது கணவரை பிரிந்து பு.புளியம்பட்டி காந்திபுரம் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதையடுத்து தமிழ் நகரில் பிரகாசம் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சங்கீதா பிரகாசம் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றார். அப்போது கதவு மூடப்பட்டு இருந்தது. ஆனால் நீண்ட நேரம் கதவு திறக்கப்பட வில்லை.
இதையடுத்து சங்கீதா அவரது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தனர். அப்போது வீட்டில் விட்ட த்தில் பிரகாசம் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பிரகாசத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அபிலாஷ் இளம்பெண்ணின் அழகில் அபிலாஷ் மயங்கினார்.
- அபிலாஷ் தற்கொலை செய்வது என முடிவு சென்றார்.
கவுண்டம்பாளையம்,
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அபிலாஷ் (வயது 20).
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் துடியலூர் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அதே மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இளம்பெண்ணின் அழகில் அபிலாஷ் மயங்கினார். கடந்த சில மாதங்களாக அவர் இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார்.
சம்பவத்தன்று அபிலாஷ் இளம்பெண்ணை சந்தித்து தனது காதலை ஏற்குமாறு கூறினார்.
ஆனால் இளம்பெண் காதலை ஏற்க மறுத்து விட்டார். இதனால் மனவேதனை அடைந்த அபிலாஷ் தற்கொலை செய்வது என முடிவு சென்றார்.
அதன்படி மில் வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து மில் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் ஒருதலை காதல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட அபிலாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சம்பவத்தன்று காலை முருகேசன் வீட்டின் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருந்தார்.
- இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சென்னிவலசு சிவாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன் (34). இவர் பெருந்துறையில் டீ கடை வைத்துள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி (23). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் முருகேசன் ஒரு பெண்ணுடன் போனில் பேசியது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவத்தன்று காலை முருகேசன் வீட்டின் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முருகேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சசிகலா தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
- இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டம் தண்ணீர் பந்தல் சின்னமுத்தூரைச் சேர்ந்தவர் தங்கமணி (45). இவரது கணவர் ரத்தினசாமி (51). இவர்களது மகள் சசிகலா (26).
இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்டம், கொடுமுடி, வெங்கமேட்டூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சசிகலா காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது பெற்றோர் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் சசிகலா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதன் பின்னர் உயர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தார். இதுகுறித்து, சசிகலாவின் தாய் தங்கமணி அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.