நர்சிங் மாணவி தற்கொலை - செல்போனில் பேசியதை தாயார் கண்டித்ததால் விபரீத முடிவு

ரபிகா உடலை கைப்பற்றி செண்பகராமன் புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரபிகா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நர்சிங் மாணவி தற்கொலை - செல்போனில் பேசியதை தாயார் கண்டித்ததால் விபரீத முடிவு
Published on

ஆரல்வாய்மொழி:

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவரது மகள் ரபிகா (வயது 18), நர்சிங் கல்லூரி மாணவி.

இவருக்கும் பூதப்பாண்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஒரு மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை இரு வீட்டாரும் கண்டித்து உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை ரபிகா நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம்.

இதனை தாயார் பானுமதி கண்டித்து உள்ளார். அதன் பிறகு ரபிகா குளிக்கச் செல்வதாக கூறிவிட்டு குளியல் அறைக்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் குளியல் அறையில் இருந்து வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், குளியல் அறை கதவை தட்டிப்பார்த்தனர்.

அப்போது ரபிகாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனை தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு ரபிகா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ரபிகா உடலை கைப்பற்றி செண்பகராமன் புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போனில் பேசியதை கண்டித்ததால் அவர் தற்கொலை முடிவை எடுத்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com