வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

யாகோபு குடும்பத்தை கவனிக்காமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.விமலா தனது மகனுடன் கடந்த 15 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் விமலா (49). இவரது கணவர் யாகோபு (54).

இந்நிலையில் யாகோபு குடும்பத்தை கவனிக்காமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் விமலா தனது மகனுடன் கடந்த 15 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

யாகோபு தங்களது பழைய வீடு இருக்கும் வெள்ளோடு சி.எஸ்.ஐ. காலனியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் விமலாவை போன் மூலமாக தொடர்பு கொண்ட யாகோபுவின் சகோதரர் சி.எஸ்.ஐ. காலனியில் உள்ள அவர்களது பழைய வீட்டில் யாகோபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனைவி விமலா அளித்த புகாரின் பேரில் வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com