தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை

வீட்டில் தனியாக இருந்த வெங்கடாசலம் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்குப்போட்டு கொண்டார்.இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டிவலசு சாஸ்திரி சாலையை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 43). பெயிண்டர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவர் காணப்பட்டார். சம்பவத்தன்று வெங்கடாசலத்தின் மனைவி வேலைக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த வெங்கடாசலம் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்குப்போட்டு கொண்டார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடாசலம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com