என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

என் தற்கொலைக்கு உயரதிகாரிகள் தான் காரணம் - போக்குவரத்து அதிகாரி தற்கொலையின் பின்னணி
- மாநகர போக்குவரத்து கழகத்தின் தாம்பரம் பணிமனை ஜே.இ. ஆக யுவராஜ் பணிபுரிந்து வந்தார்
- கழுத்து வலி காரணமாக யுவராஜ் கடந்த 12.8.2025 முதல் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஆதனூரைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரி யுவராஜ் மறைமலைநகர் அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலைக்கு செய்வதற்கு முன்பு டி.ஜி.பி.க்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ள யுவராஜ், அதில் என் தற்கொலைக்கு உயரதிகாரிகளே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மாநகர போக்குவரத்து கழகத்தின் தாம்பரம் பணிமனை ஜே.இ. ஆக யுவராஜ் பணிபுரிந்து வந்தார். கழுத்து வலி காரணமாக யுவராஜ் கடந்த 12.8.2025 முதல் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
அவருக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. மேலும் வேலைக்கு வரக்கூடாது என அதிகாரிகள் நிர்பந்தித்ததாகவும் விடுப்பு கேட்டு விண்ணப்பித்தும் ஏ.இ. கோவிந்தராஜ் நிராகரித்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.
ஏ.இ. கோவிந்தராஜ், மற்றொரு அதிகாரி சொர்ணலதா இருவரும் தான் என் தற்கொலைக்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.






