சின்ன சேலம் அருகே மினி லாரி மோதி வாலிபர் பலி

சிவராஜ் (வயது 25). தனது தந்தைக்கு உதவியாக கல் உடைக்கும் வேலை செய்துவந்தார்.இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த மினி லாரி மோதியது.
சின்ன சேலம் அருகே  மினி லாரி மோதி வாலிபர் பலி
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பகண்டை கூட்ரோடு கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் சிவராஜ் (வயது 25). இவர் தனது தந்தைக்கு உதவியாக கல் உடைக்கும் வேலை செய்துவந்தார். சிவராஜூக்கு பெண் பார்ப்பதற்காக சின்னசேலம் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு தன் தாய் லட்சுமியுடன்தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பெண்னை பார்த்துவிட்டு பகண்டை கூட்ரோடுக்கு வந்து தனது தாயை பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார்.   பின்னர் சிவராஜ் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தில் வசிக்கும் உறவினரை பார்த்து விட்டு மீண்டும் பகண்டை கூட்டு ரோடு செல்வதற்கு தோட்டப்பாடி மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது எதிரே வந்த மினி லாரி மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிவராஜை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தடாக்டர், சிவராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த கீழ்குப்பம் ய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவராஜ் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கீழ்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com