விக்கிரவாண்டி அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலி

பலராமன் மனைவி மற்றும் குடும்பத்தார் நேற்று இரவே விக்கிரவாண்டிக்கு சென்று விட்டனர்.அவர், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சித்தார்.
விக்கிரவாண்டி அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலி
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் (வயது 73). விவசாயி. இவரது உறவினரின் புதிய வீட்டின் புதுமனை புகுவிழா முண்டியம்பாக்கத்தில் இன்று நடக்கிறது. இதற்காக பலராமன் மனைவி மற்றும் குடும்பத்தார் நேற்று இரவே விக்கிரவாண்டிக்கு சென்று விட்டனர்.இந்நிலையில் விவசாயி பலராமன் இன்று அதிகாலை முண்டியம்பாக்கத்திற்கு புறப்பட்டார். பஸ் ஏறி விழுப்புரத்திற்கு வந்தார். அங்கிருந்து பஸ் மூலம் முண்டியம்பாக்கம் வந்த அவர், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சித்தார்.

அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் பலராமன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பலராமன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இது குறித்த புகாரின் பேரில் விரைந்து சென்ற விக்கிரவாண்டி போலீசார், விவசாயி பலராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற விவசாயி சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com