திருவெண்ணைநல்லூர் அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவன் பலி

ஸ்ரீராம் கடந்த 23-ந்தேதி துலக்கம்பட்டில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
திருவெண்ணைநல்லூர் அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவன் பலி
Published on

விழுப்புரம்:

உளுந்தூர்பேட்ட வட்டம் கீழ்குப்பம்வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் ஸ்ரீராம் (வயது 15). அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 23-ந்தேதி துலக்கம்பட்டில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு இரவு படுத்து உறங்கியபோது, ஸ்ரீராமை பாம்பு கடித்துள்ளது. இதில் அலறி துடித்த மாணவனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவன் ஸ்ரீராம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். பாம்பு கடித்து மாணவன் பலியான சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com