என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
உளுந்தூர்பேட்டை அருகே சாமி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
- உளுந்தூர்பேட்டை அருகே சாமி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
- பொதுமக்கள், உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை கிளாபாபாளையத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 23). அதே ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், சாமி ஊர்வலத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, சீரியல் பல்புகள் ஒளிராமல் நின்று போனது. இதனையடுத்து, அதனை சரிசெய்யும் பணியில் பச்சையப்பன் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் தாக்கி பச்சையப்பன் தூக்கி வீசப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்ட பொதுமக்கள், உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பச்சையப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்து உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெகடர் அலெக்ஸ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.