புவனகிரி அருகே கார் மோதி முதியவர் சாவு

பழனி கடந்த 29-ந்தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி அருகே கார் மோதி முதியவர் சாவு
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த எறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 60). இவர் கடந்த 29-ந்தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com