என் மலர்
நீங்கள் தேடியது "Governor RN Ravi"
- பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.
- விஜயேந்திரரின் உருவப்படம் மற்றும் பிரசாதத்தை ஸ்ரீமடத்தின் நிர்வாகிகள் கவர்னருக்கு வழங்கினார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சங்கரமடம் ஆகியவற்றில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு வந்த அவரை அறங்காவலர் குழுவின் உறுப்பினர் வ.ஜெகன்னாதந், காஞ்சிபுரம் சரக அறநிலையத்துறை இணை ஆணையர் ரா.வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, கோவில் செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, தியாக ராஜன், சீனிவாசன் மற்றும் கோவில் அர்ச்சகர் கே.ஆர்.காமேசுவர சிவாச்சாரியார் ஆகியோர் பூரண கும்ப மரியாதையுடன் கோவிலுக்குள் அழைத்து சென்றனர்.
மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வரும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை கோவில் ஸ்தானீகர்கள் சியாமா சாஸ்திரிகள், நடன சாஸ்திரிகள், கோவில் மணியக்காரர் சூரியநாராயணன், சங்கர மடத்தின் நிர்வாகி ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனர்.
காஞ்சி சங்கரமடத்தில் உள்ள மகாபெரியவர் அதிஷ்டானத்துக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை மடத்தின் நிர்வாகி கீர்த்தி வாசன், சங்கரா கண் மருத்துவமனையின் தலைவர் பம்மல் விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். பிருந்தாவனத்தில் மகா பெரியவர் கிரீடம் அணிந்தும் தங்க ஹஸ்தத்துடனும் ஜெயேந்திரர் மயில்தோகை அலங்காரத்திலும் காட்சி அளித்தார்.
பிருந்தாவனத்தின் அர்ச்சகர் பாலாஜி சங்கர மடத்தின் சிறப்புகள் மற்றும் காஞ்சி மடாதிபதிகளின் சிறப்புகளை விரிவாக விளக்கிக் கூறினார். விஜயேந்திரரின் உருவப்படம் மற்றும் பிரசாதத்தை ஸ்ரீமடத்தின் நிர்வாகிகள் கவர்னருக்கு வழங்கினார்கள்.
- தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
- திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆசிரியர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் 'பாரதம்' என்று குறிப்பிட்டு உள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இளம் மனங்களின் திறனையும் குணநலன்களையும் வடிவமைத்து வலிமை மற்றும் திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தரை நியமிக்க யு.ஜி.சி. விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது.
- யு.ஜி.சி. சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை.
சென்னை:
தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 3 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவிகள் காலியாக உள்ளன.
பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்ந்தெடுக்க யு.ஜி.சி. பிரதிநிதியை (பல்கலைக்கழக மானியக்குழு பிரதிநிதி) தேடுதல் குழுவில் சேர்க்க வேண்டும் என்று கவர்னர் நிபந்தனை விதித்து உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக துணை வேந்தர் நியமனத்தில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள்படி பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தரை நியமிக்க யு.ஜி.சி. விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது.
யு.ஜி.சி. சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை. எனவே ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்றலாம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக பா.ஜ.க. மாநிலச் செயலாளர் ஏ.அஸ்வத்தாமன், கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
- சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதிக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டும்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. மாநிலச் செயலாளர் ஏ.அஸ்வத்தாமன், கவர்னருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை கொசுக்கள், டெங்கு, கொரோனா மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு சனாதன தர்மம் போன்றவற்றை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தும் நோக்குடனும், சனாதன தர்மம் மீது வெறுப்பைத் தூண்டிவிடும் வகையிலும், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் உதயநிதி வேண்டுமென்றே பேசியுள்ளார்.
மதத்தின் அடிப்படையில் பகையை வளர்க்கும் அவரது பேச்சு, நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமாக அமைகிறது. எனவே, இந்து சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விழாவுக்கு தலைமை தாங்கி பட்டங்களை வழங்குகிறார்.
- நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன்பெரி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் 43-வது பட்டமளிப்பு விழா நாளை (5-ந்தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது.
பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விழாவுக்கு தலைமை தாங்கி பட்டங்களை வழங்குகிறார். நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன்பெரி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
துணைவேந்தர் வேல்ராஜ் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
- கோப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கம் கேட்டிருந்தார் கவர்னர் ஆர்.என். ரவி.
- கவர்னர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவர் பதவி மற்றும் 8 உறுப்பினர்களின் பதவிகள் பல மாதங்களாக காலியாக உள்ளன.
இதில் தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபு பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்து கவர்னருக்கு கோப்புகளை அனுப்பி வைத்தது. ஆனால் இதற்கு ஒப்புதல் வழங்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுத்துவிட்டார்.
இந்த நியமனம் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறி அதை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டார். அந்த கோப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கம் கேட்டிருந்தார்.
கவர்னர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, மீண்டும் அதே பரிந்துரையை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளது.
- நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள்.
- ஓணம் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஓணம் பண்டிகை இன்று கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
ஓணம் திருநாளில், நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள். மகாபலி நமக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ அருள்புரியட்டும் - ஆளுநர் ரவி
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது.
- 2014ல் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களின் நலன் காக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார்.
ஈரோடு:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- பா.ஜ.க. பொறுப்பேற்று 10 ஆண்டு காலம் ஆகியும் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
அதற்கு மாறாக விலைவாசி நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கட்டுப்படுத்துவதற்கு எந்தவித முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. பிரதமர் செல்லும் இடங்களில் குடும்ப அரசியல் மற்றும் ஊழலை பற்றி மட்டுமே பேசுகிறார்.
ஊழலை பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக பலம் இருக்கிறதா என்பதை அவர் யோசிக்க வேண்டும். ஊழல், வேலையில்லா திண்டாட்டம் இதையெல்லாம் கண்டித்து வருகிற செப்டம்பர் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.
12-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், 13 ,14 இரு நாட்களில் வட்ட மற்றும் ஒன்றிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
தமிழ்நாடு ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டி அரசாங்கத்தையும் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கை அரசாங்கத்திற்கு எதிரானது மட்டுமல்ல தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கையாக உள்ளது.
அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பூர்த்தி செய்ய வேண்டும், ஆனால் அரசை செயல்படுத்த முடியாத நடவடிக்கையை ஆளுநர் மேற்கொண்டு வருகிறார். ஆளுநரின் செயல்பாட்டை எதிர்த்து குடியரசுத் தலைவரிடம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு முறையீடு செய்துள்ளார்கள்.
ஆனால் இதுவரை குடியரசுத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் ஏட்டிக்கு போட்டியாக தொடர்ந்து வன்முறையை தூண்டக்கூடிய வகையில் கவர்னரின் நடவடிக்கை உள்ளது.
கவர்னரை கண்டித்து தமிழ்நாட்டு நலன் கருதி கவர்னரின் அராஜகத்தை கண்டித்து மக்களே வெகுண்டெழுந்து போராட வேண்டிய நிலைமை ஏற்படும். இது போன்று ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு கவர்னரும், மத்திய அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது. 25-ம் தேதி முதலமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி 25-ம் தேதி அவரவர் தொகுதியில் திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும்.
நாட்டிலேயே மிக மோசமான முறையில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் உயிர் உடமை பாதுகாப்பில்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதும், சேதப்படுத்தப்படுவதும் தொடர்ந்து வருகிறது. கடற்கொள்ளையர்களாலும் பொருட்கள் களவாடப்படுகிறது.
2014ல் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களின் நலன் காக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார். இலங்கையுடன் நல்ல நட்பில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை ஒன்றிய அரசு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவை வரும் கவர்னர் ஆர்.என். ரவிக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
- போராட்ட அறிவிப்பு காரணமாக கோவை வரும் கவர்னருக்கு வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவை:
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் பயணமாக நாளை (24-ந்தேதி) கோவை வருகிறார்.
நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு அவர் கோவை வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து கோவை பாரதியார் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.
தொடர்ந்து அவர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார். அங்கு சிறப்பு விருது பெறுபவர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
இதையடுத்து பிற்பகலில் அவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு செல்கிறார். அங்கு தரிசனம் முடிந்து மீண்டும் அவர் பாரதியார் பல்கலைக்கழகம் வருகிறார். இரவு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
25-ந்தேதி பேரூரில் பேரூர் ஆதீனம் நடத்தும் நொய்யல் பெருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பின் அவர் கோவை புறப்பட்டுச் செல்கிறார்.
இதற்கிடையே நாளை கோவை வரும் கவர்னர் ஆர்.என். ரவிக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. நீட் தேர்வு எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் இழுத்தடித்து வருவதை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்ட அறிவிப்பு காரணமாக கோவை வரும் கவர்னருக்கு வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவை விமான நிலையம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்பட அவர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
- தமிழக அரசு அனுப்பி வைத்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ளாத கவர்னர் ஆர்.என்.ரவி, இந்த கோப்பில் கையெழுத்திடாமல் கடந்த 1 மாதமாக கிடப்பில் வைத்திருந்தார்.
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டின் அரசுத் துறைகளுக்கு தேவையான ஊழியர்களை போட்டி தேர்வு நடத்தி நியமனம் செய்து வருகிறது.
இந்த தேர்வாணையம் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும்.
அரசு அலுவலகங்களில் உள்ள ஒவ்வொரு பணிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்களை தேர்வு செய்வது டி.என்.பி.எஸ்.சி.யின் முக்கிய பணியாகும். இந்த அமைப்புக்கு தலைவர் பதவி நியமிக்கப்படாமல் காலியாக உள்ளது.
மிக முக்கியத்துவம் வாய்ந்த டி.என்.பி.எஸ்.சி. யில் 4 உறுப்பினர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் (ஐ.ஏ.எஸ். ஓய்வு) டி.என்.பி.எஸ்.சி. பொறுப்பு தலைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதையொட்டி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயரையும், 8 உறுப்பினர் பதவிகளுக்கு தகுதியான நபர்களின் பெயர்களையும் தமிழக அரசு பரிந்துரை செய்து கவர்னருக்கு கோப்புகளை அனுப்பியது.
தமிழக அரசு அனுப்பி வைத்த இந்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ளாத கவர்னர் ஆர்.என்.ரவி, இந்த கோப்பில் கையெழுத்திடாமல் கடந்த 1 மாதமாக கிடப்பில் வைத்திருந்தார்.
இப்போது சைலேந்திர பாபு தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசுக்கு கோப்பை திருப்பி அனுப்பி இருக்கிறார்.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும், பிரகாஷ் சிங் என்பவரது வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வழிகாட்டுதல்களின் படி இந்த நியமனம் இல்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
டி.ஜி.பி.யாக இருந்தபோது சைலேந்திர பாபு ஓய்வுபெற்ற தேதியை பொருட்படுத்தாமல் டி.ஜி.பி.யாக 2 ஆண்டுகள் பதவி வகித்ததால் கடந்த ஜூன் 30-ந்தேதி தனது 61-வது வயதில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஆனால் இப்போது நியமிக்கப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி காலம் 6 ஆண்டுகள் என்றாலும், அதிகபட்ச வயது வரம்பு 62 ஆகும்.
இதை சுட்டிக்காட்டி உளள கவர்னர் ஆர்.என்.ரவி, சைலேந்திரபாபு நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை தனக்கு முழுமையாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். இந்த நியமனம் தொடர்பாக அறிவிப்புகள் வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா? என்றும் அரசுக்கு கவர்னர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். எனவே இது தொடர்பான விவரங்களை விளக்கமாக தமக்கு தெரிவிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதவிகளுக்கான நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் எவ்வாறு இறுதி செய்யப்பட்டனர் என்பதையும் விளக்குமாறு கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
இந்த விவகாரம் அரசுக்கும், கவர்னருக்கும் மீண்டும் மோதல் போக்கை உருவாக்கி உள்ளது.
கவர்னர் குறிப்பிட்டுள்ள விளக்கங்களுக்கு தமிழக அரசு விரிவாக பதில் தயாரித்து வருவதாகவும். விரைவில் அந்த கோப்பு முழு விளக்கங்களுடன் கவர்னருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு இணைய வழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டு கட்டுப்பாட்டு சட்டம் 2022-ன் கீழ் அமைக்கப்பட்ட தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணையத்தின் தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களின் நியமனத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.