நடிகர் ரஜினிகாந்த் நலம்பெற வேண்டுகிறேன் - கவர்னர் ஆர்.என்.ரவி

ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்.ரஜினிகாந்த் குணமடைய வேண்டுகிறேன்.
நடிகர் ரஜினிகாந்த் நலம்பெற வேண்டுகிறேன் - கவர்னர் ஆர்.என்.ரவி
Published on: 

நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அவர் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கவர்னர் ஆன் என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com