என் மலர்
நீங்கள் தேடியது "கவர்னர் ஆர்.என்.ரவி"
- பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தடுமாறும் அவல நிலை.
- பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 8 பல்கலைக் கழகங்கள் உள்பட உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்கள், அதாவது 85 சதவீதம் பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தடுமாறும் அவல நிலை உருவாகிவிடும்.
துணைவேந்தர்கள் இல்லாமல் பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை. சில பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டாலும் துணைவேந்தர்களின் கையெழுத்து இல்லாமல் வழங்கப்பட்டுள்ள பட்டச் சான்றுகளுக்கு மதிப்பில்லை என்பதால் மாணவர்களின் வேலைவாய்ப்புத் தகுதி பாதிக்கப்பட்டுள்ளது.
கவர்னருக்கும், அரசுக்கும் இடையிலான மோதலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. பல்கலைக்கழகங்கள் முடங்கி விடக்கூடாது. எனவே அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வந்து காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக கார் மூலம் ஊட்டிக்கு செல்கிறார்.
- தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார்.
ஊட்டி,
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி ஊட்டிக்கு வந்தார். அப்போது அவர் முத்தோரை பாலாடாவில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்தநிலையில் அவர் மீண்டும் 5 நாள் பயணமாக நாளை (7-ந் தேதி) ஊட்டி வருகிறார். இதற்காக சென்னையில் விமானம் மூலம் கோவை வருகிறார்.
இங்கிருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக கார் மூலம் ஊட்டிக்கு செல்கிறார். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார்.
கவர்னர் ரவி வருகிற 12-ந் தேதி வரை இங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதன்பிறகே அவர் சென்னை திரும்ப உள்ளார். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்து இதுவரை அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஊட்டியில் தங்கியிருக்கும் அவர் நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய கேரள பகுதியான வயநாடு மாவட்டத்துக்கும் அவர் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கவர்னர் வருகையை முன்னிட்டு ஊட்டியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டு உள்ளது.
- அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
- அமைச்சரை முழுமையாக நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்றார்.
சென்னை:
அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலகவேண்டும் என முதல்வருக்கு கவர்னர் முன்னதாக கடிதம் எழுதியிருந்தார்.
ஒரு அமைச்சர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதனால் மட்டுமே அவர் பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ.க. அமைச்சர்கள் 33 பேர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் 2 துறைகளை 2 அமைச்சர்களுக்கு மாற்றக்கோரி பரிந்துரைத்த தமிழக அரசின் கடிதத்தை கவர்னர் ஏற்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.
கவர்னர் அனுப்பிய கடிதத்திற்கு பதிலாக அதே கோரிக்கையுடன் மற்றொரு கடிதத்தை அனுப்பியுள்ளோம். அமைச்சரை முழுமையாக நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது.
துறை மாற்றத்திற்கு கவர்னர் ஒப்புதல் பெற அவசியமில்லை. மரபு கருதி கடிதம் அனுப்பப்பட்டது. அமைச்சரவையை மாற்றுகிறோம் என்று காரணங்களை குறிப்பிட்டு கடிதம் அனுப்பினாலும், அதனை கவர்னர் திருப்பி அனுப்புகிறார்.
அமைச்சர்களின் துறைகளை ஏன் முதலமைச்சர் மாற்றுகிறார் என காரணம் கேட்க கவர்னருக்கு அதிகாரமும், உரிமையும் இல்லை.
கவர்னர் பா.ஜ.க.வின் ஏஜெண்டாகவும், தமிழக அரசின் அதிகாரங்களில் அதிகம் தலையிடுபவராகவும் இருக்கிறார். அரசியல் சட்டத்திற்கும் மாநில சுயாட்சிக்கும் எதிராக கவர்னர் செயல்படுகிறார் என தெரிவித்தார்.
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கவர்னர் மீது காங்கிரஸ் புகார் மனு கொடுத்தனர்.
- கவர்னர் ஆர்.என்.ரவி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கி ரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை யிலான காங்கிரசார், விருது நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் வடலூர் ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி யில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசும்போது, சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். அறியாமை மற்றும் காழ்ப்பு ணர்ச்சி காரணமாகவே சிலர் எதிர்க்கிறார்கள்.
சனாதன தர்மத்தை ஏற்றாலும், எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்ளேயே இருப்பார்கள். உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பது தான் சனாதன தர்மம்.
யார் வேண்டுமானாலும் எந்த மார்க்கத்தை வேண்டு மானாலும் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது என கருத்து தெரிவித்திருந்தார். இதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத் துக்கு எதிராக உண்மைக்கு புறம்பான கருத்தை பதிவிட்டிருப்பதும் சமத்து வம், சமதர்மம் நிறைந்த மக்களாட்சி முறையில் உயரிய பொறுப்பில் உள்ள ஒருவர் சர்ச்சையை ஏற்படுத் தும் வகையில் மதம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்தி ருப்பதும் சட்டப்படி குற்றமா கும். எனவே தமிழக கவர் னர் ஆர்.என்.ரவி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- 4-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
- மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.
கடலூர்:
சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழக 85-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வருகிற 4-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை பெறுகிறது. விழாவிற்கு பல்கலைக் கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.
இதில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சரும், பல்கலை. இணைவேந்தரு மான பொன்முடி பங்கேற்று பேசுகிறார். மேலும், இஸ்ரோ ஆராய்ச்சி மைய சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பட்டமளிப்பு விழா உரை யாற்றுகிறார். விழாவில் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் ராம.கதிரேசன், பதி வாளர் சிங்காரவேல் மற்றும் சிண்டிகேட் உறுப்பி னர்கள், புல முதல்வர்கள் உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.
- விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
- காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறிஇருப்பதாவது:-
"குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2006 ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக எஸ்.மணிக்குமார் பணியாற்றினார்.
- 2019 ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக கேரளா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமாரை கவர்னர் ஆர்.என்.ரவி நியமனம் செய்துள்ளார்.
கேரளா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அல்லது 70 வயதை எட்டும் வரை இந்த பொறுப்பில் நீடிப்பார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006 ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக எஸ்.மணிக்குமார் பணியாற்றினார். 2019 ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2023 ஏப்ரல் 23 அன்று அவர் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
- விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) ஈஷா சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள் நடைப்பெற்றது. ஆதியோகி முன்பு நடைப்பெற்ற யோக தின நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
மேலும் ஈஷாவின் சார்பில் டி.என்.ஏ.யு. வில் நடைபெற்ற விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
நம் பாரத தேசத்தின் பெருமையான அம்சங்களில் ஒன்றாக விளங்கும் யோக அறிவியலை சாதி, மத, இன பேதம் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் தளராமல் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈஷா யோகா மையம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக யோக தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் இலவச யோக வகுப்புகளை மிகப்பெரிய அளவில் ஈஷா யோகா மையம் நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இலவச யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் நடத்தியது.
ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி முன்பு நடைபெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

அதேபோல் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவருடன் வேளாண் பல்கலைகழக மாணவர்கள், ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.
மேலும் ஆதியோகி முன்பு நடைப்பெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.

அதே போன்று கோவையில், மத்திய சிறைச்சாலை, ரெயில் நிலையம், விமானப்படை மேலாண்மை பயிற்சிக் கல்லூரி, ஐ.என்.எஸ். அக்ரானி, சூலூர் விமானப்படைத் தளம், சி.ஆர்.பி.எப். மத்திய பயிற்சிக் கல்லூரி, இன்போசிஸ் அலுவலகம், பல்வேறு கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற்றன.
இந்த இலவச யோகா வகுப்புகளில் எளிமையான அதே நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த உப-யோகா பயிற்சிகளான யோக நமஸ்காரம், நாடி சுத்தி, சாம்பவி முத்ரா போன்ற பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு கவர்னரை சந்திக்கும்.
- பா.ஜனதாவும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தது.
சென்னை:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயத்துக்கு 60 பேர் வரை பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. குழு நாளை சந்திக்கிறது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு கவர்னரை சந்திக்கும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் தொடர்பாக பா.ஜனதா குழுவினர் இன்று கவர்னரை சந்தித்து இருந்தனர். மேலும் பா.ஜனதாவும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தது.
- 2 நாட்களுக்கு முன்பு திடீரென டெல்லி சென்றிருந்தார்.
- சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென டெல்லி சென்றிருந்தார்.
டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய கல்வித் துறை மந்திரி தர்மேந்திர பிரதான், பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ ஆகியோரை சந்தித்து பேசினார்.
அப்போது தமிழ்நாட்டு நலன் சார்ந்த விஷயங்கள் குறித்தும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவங்கள், ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட பல்வேறு விஷ யங்கள் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் அவர் எடுத்துக் கூறியதாக தெரிகிறது. மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியதாக தெரிகிறது.
இந்த மாதத்துடன் கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் முடிவடைவதால் அது குறித்தும் பிரதமரிடம் அவர் பேசியிருப்பார் என தெரிகிறது.
டெல்லியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி இன்று இரவு சென்னை திரும்புகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 14 சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
- மசோதாக்களில் அவர் கையெழுத்திட்டதும் அது சட்டமாகி விடும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள் அனைத்தும் கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
அந்த மசோதாக்களில் அவர் கையெழுத்திட்டதும் அது சட்டமாகி விடும். ஆனால் கடந்த சில வருடங் களாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களில் ஒருசில மசோதாக்களில் கையெழுத் திடாமல் விளக்கம் கேட்டு அரசுக்கே திருப்பி அனுப்பிய சம்பவமும் அரங்கேறியது.
இதனால் கவர்னருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் இந்த பிரச்சனை கோர்ட்டு வரை சென்றது.
இந்த சூழலில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கவர்னர் நடவடிக்கைகளில் சிறிது மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் மொத்தம் 14 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த 14 சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி இப்போது ஒப்புதல் வழங்கி உள்ளார்.
புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்திய மசோதா, ஊரக உள்ளாட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் போது அப்பகுதியில் வரும் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வதற்கான சட்ட திருத்த மசோதா.
சென்னையில் தனியார் வளாகம் அல்லது ஒரு தனியார் தெருவின் மிக அருகில் உள்ள இடத்தில் இருந்து 30 மீட்டர் தூரத்துக்குள் கழிவுநீரை வாரியத்தின் கழிவுநீர் பாதையில் வெளியேற்றுவதற்கு இணைப்பு பெறுவதை கட்டாயமாக்கும் திருத்த மசோதா, சென்னை மாநகர காவல் சட்டத்தை மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான சட்ட திருத்த மசோதா, உள்ளிட்ட 14 மசோதாக்களுக்கும் கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சவுந்தர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- நேற்று சிகிச்சை பலனின்றி சவுந்தர்யா உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த சவுந்தர்யா செய்தித் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் மீடியாவில் இணைந்தார். தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த சவுந்தர்யாவின் கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சவுந்தர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பலரும் இவருடைய சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கினர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.
கடந்த 6 மாதமாக சவுந்தர்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் செய்தித்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவருடைய மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். கவர்னர் மாளிகையின் எக்ஸ் பதிவில், "செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அவர்களின் மரணத்தை அறிந்து வேதனையடைந்தேன்; அவர் ஒரு பிரகாசமான மற்றும் சிறந்த செய்தித் தொகுப்பாளராக விளங்கினார்; அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






