search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Condemnation Demonstration"

    • கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்காவிட்டால் கள்ளக்குறிச்சி மாவட்டம் போல் கடலூர் மாறும் என முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • தற்போது மின்சார கட்டணம் வரலாறு காணாத வகையில் உயர்த்தி உள்ளனர்.தமிழகத்தில் 40 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    கடலூர்: 

    கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டினை கண்டு கொள்ளாத தி.மு.க. அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கி பேசினார்.அவர் ேபசியதாவது:- அ.தி.மு.க. .ஆட்சி காலத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடத்தில் தற்போது மின்சார கட்டணம் வரலாறு காணாத வகையில் உயர்த்தி உள்ளனர்.தமிழகத்தில் 40 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தனியாரிடம் ரூ.2.73-க்கு ஒரு யூனிட் மின்சாரம் கிடைத்து வரும் நிலையில் ரூ.5.25-க்கு மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்கள் மீது அரசு வரியை சுமத்தி வருகின்றனர். மேலும் சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை வீடுகளுக்கும், கமர்சியல் இடத்திருக்கும் தமிழக அரசு உயர்த்தி உள்ளதால் வணிகர்கள், பொதுமக்கள் கடும் அவதிஅடைந்து உள்ளனர்.

    இது மட்டும் இன்றி சிமெண்ட், கம்பி, ஜல்லிக்கற்கள் போன்றவற்றின் விலை கடுமையாக விலை உயர்ந்து உள்ளதால் பொதுமக்களின் அடிப்படை வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு ஸ்கூட்டி, மற்றும் அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி பொதுமக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். தற்போது தி.மு.க. ஆட்சியில் கடலில் பேனா வைப்பதற்கு 80 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளன. ஆனால் தமிழகம் முழுவதும் மக்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் 80 கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் மேற்கொள்வது அரசுக்கு நியாயமா?.

    தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கள்ளக்குறிச்சி சம்பவம் அனைவருக்கும் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு சட்ட ஒழுங்கு பிரச்சினை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது மட்டும் இன்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லாக்கப்பில் சாவு ஏற்பட்டு உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மக்கள் பயன்பெறும் வகையில் கலெக்டர் அலுவலகம் அருகில் பஸ் நிலையம் அமைப்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் எம். புதூர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அல்லது அந்த இடத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதனை பார்க்க வேண்டும் .மேலும் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆகையால் கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்காவிட்டால் கள்ளக்குறிச்சி மாவட்டம் போல் கடலூர் மாவட்டம் மாறும் என்பதனை கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு எச்சரிக்கை விடுகிறோம். இது போன்ற சம்பவங்கள் முழுவதும் தவிர்க்கப்பட வேண்டுமானால் தி.மு.க. ஆட்சியை அகற்றி தூக்கி எறிய வேண்டும். மேலும் தமிழகத்தில் மந்திரிகள், அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாமல் குடும்ப ஆட்சியாக திமுக செயல் படுகின்றது மக்களை வஞ்சிக்கின்ற ஆட்சியாக திமுக செயல் படுகின்றது. ஆகையால் மக்கள் பிரச்சினை தீர்க்கும் அரசாக அதிமுக இருந்து வருவதால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அமைய மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன், அ.தி.மு.க. மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சீனிவாச ராஜா, மாநில இளைஞரணி துணை செயலாளர் சி.கே.எஸ். கார்த்திக்கேயன், மீனவரணி தங்கமணி, பேரவை துணைச் செயலாளர் ஆர்.வி. ஆறுமுகம், பகுதிகளை செயலாளர்கள் வெங்கட்ராமன், வக்கீல் பாலகிருஷ்ணன், கெமிக்கல் மாதவன், வினோத் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவை தலைவர் சேவல் குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், மாவட்ட துணை செயலாளர் பக்கிரி ஆகியோர் வரவேற்றனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் வட்ட துணை செயலாளர் மணிமேகலை தஷ்ணா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சங்கீதா வசந்த ராஜ், ஏ.ஜி.தஷ்ணா, ஏ.ஜி.எம். வினோத்குமார், ஒன்றிய செயலாளர்கள் கந்தன், தமிழ்ச்செல்வம், நாகபூஷணம், சிவா, நகர செயலாளர்கள் முருகன், காசிநாதன், பேரூராட்சி செயலாளர்கள் கனகராஜ், அர்ஜுனன், மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், வர்த்தக பிரிவு வரதராஜன், இலக்கிய அணி ஏழுமலை, இணைச் செயலாளர் முத்து, சிறுபான்மை பிரிவு தாஜுதீன், ஒன்றிய கவுன்சிலர்கள் மகேஸ்வரி விஜய ராயலு, வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் அழகானந்தம் நன்றி கூறினார். முன்னதாக அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பெண்கள் திரண்டு வந்ததால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டிருந்தது.

    ×