search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி"

    • லாரி டயர் மற்றும் டீசல் டேங் வெடித்து சிதறியது.
    • அதிஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா உமையா ள்புரம் கிராமத்தில் உள்ள விவசாயி களிடமிருந்து 60 கட்டு வைக்கோல் போரை வாங்கிகொண்டு மினி லாரியில் ஏற்றி கொண்டு லால்குடி புறப்பட்டு சென்றனர்.

    இந்நிலையில் உமையாள்புரம் மெயின்ரோ ட்டில்ல வரும்பொழுது மின் வயரில் லாரி உரசியதாக கூறப்படுகிறது.

    இதில் லாரியில் இருந்த வைக்கோல் போர் தீ பிடித்து எரிந்தது. மேலும் லாரி டயர் மற்றும் டீசல் டேங் வெடித்து சிதறியது.

    இதில் அதிஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்.

    இது குறித்து லாரியின் உரிமையாளர் லால்குடி சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் இருக்க தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் ரூ. 4 லட்சம் சேதம் ஏற்பட்டது.

    இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செல்போன் திருடியதாக கூறி வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி ஓட்டிச்சென்ற இந்த கொடூர சம்பவம் ஒடிசா மட்டுமின்றி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    புவனேஸ்வர் :

    ஒடிசாவின் கேந்திரபாடா மாவட்டத்துக்கு உட்பட்ட திகர்பங்கா கிராமத்தை சேர்ந்த கஜேந்திரா ஸ்வைன் (வயது 28) என்ற வாலிபர், பகுதி நேரமாக டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 22-ந்தேதி ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் லாரி டிரைவர்களை சந்தித்து வேலை கேட்டுக்கொண்டிருந்தார். பாரதீப் துறைமுகம் அருகே உள்ள புடாமண்டல் பாலத்துக்கு அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் டிரைவர்களிடம் வேலை கேட்பதற்காக சென்றார்.

    அப்போது ஒரு லாரியை நோக்கி இவர் சென்றபோது திடீரென ஒரு டிரைவர் தனது செல்போனை காணவில்லை என சத்தம்போட்டார். உடனே சில டிரைவர்கள் சேர்ந்து கஜேந்திரா ஸ்வைனை பிடித்து, அவர்தான் செல்போனை திருடியதாக கூறி சரமாரியாக அடித்து உதைத்தனர். அத்துடன் நிற்காமல் அவருடைய கழுத்தில் காலணி மாலையை அணிவித்தனர். பின்னர் அவரை ஒரு லாரியின் முன்புறம் கயிற்றால் கட்டி ஓட்டிச்சென்றனர். 3 கி.மீ. தூரத்துக்கு ஊர்வலமாக அழைத்துச்சென்ற அவர்கள், பின்னர் அவிழ்த்து விட்டனர்.

    ஆனால் இந்த அதிர்ச்சி மற்றும் காயம் போன்றவற்றால் அவரால் பின்னர் எழுந்திருக்கவும் முடியவில்லை. இதற்கிடையே லாரி டிரைவர்களின் இந்த கொடூர செயலை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். வைரலாக பரவிய இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த பயங்கர சம்பவத்தை நிகழ்த்திய லாரி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ பதிவை பார்த்த போலீசாரும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட லாரி டிரைவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.

    இந்த சம்பவத்தை அறிந்த மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள், தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். செல்போன் திருடியதாக கூறி வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி ஓட்டிச்சென்ற இந்த கொடூர சம்பவம் ஒடிசா மட்டுமின்றி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையம் அருகே உள்ள ஆனங்கூர் ரோடு பழைய அஞ்சல் அலுவலகம் அருகே வசிப்பவர் சுரேஷ் (வயது 30). கட்டிட கூலி தொழிலாளி. 

    இவர் தனது மொபட் வாகனத்தில் ஒட்டன்கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி திடீரென மொபட்  மீது மோதியது. இதில்  சுரேஷ் பலத்த காயமடைந்தார். 

    இதையடுத்து அவர் குமாரபாளையம்  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்ததில் லாரி டிரைவர் திருச்சியை சேர்ந்த (சுரேஷ் 45), என்பது தெரியவந்தது. லாரி டிரைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

    நாகை அருகே லாரி கவிழ்ந்து பெண் பலியானார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் கல்பனா (வயது 40). இவர் கீச்சாங்குப்பம், சாமந்தான் பேட்டை, நம்பியார் நகர் உள்ளிட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண்களுடன் இணைந்து தினமும் லாரியில் மீன்களை ஏற்றி கொண்டு வியாபாரம் செய்து வருவது வழக்கம்.

    அதன்படி இன்று அதிகாலை கல்பனா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வேம்பு (52), பொன்னாச்சி (63), மீனாட்சி (45), பட்டம்மாள் (60), சத்யா (44) உள்ளிட்ட 7 மீனவ பெண்களுடன் சேர்ந்து டெம்போ லாரியில் மீன் லோடு ஏற்றிக் கொண்டு வியாபாரம் செய்வதற்கு திருவாரூர் நோக்கி புறப்பட்டார். 

    லாரியை கரிகாலன் என்பவர் ஓட்டினார்.அப்போது கீழ்வேளூர் அருகே சென்ற போது லாரியின் பின் பக்க டயர் திடீரென வெடித்தது.

     இதனால் நிலை தடுமாறிய லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. லாரியில் இருந்த பெண்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர்.

    இந்த விபத்தில் கல்பனா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.  வேம்பு, மீனாட்சி, பட்டம்மாள் உள்ளிட்ட 7 பெண்கள் மற்றும் டிரைவர் கரிகாலன் ஆகிய 8 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவையாறு அருகே லாரி மோதி வங்கி ஊழியர் பலியானார்.
    திருவையாறு:

    அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 26). 

    இவர் அரியலூரில் ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் வேலை சம்மந்தமாக தனது மோட்டார் சைக்கிளில் நேற்று கும்பகோணம் சென்றுவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டார். 

    திருவையாறு சர்ச் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. 


    இதில் தலையில் பலத்த காயமடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெட்ரோல், டீசல் கலால் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பரமத்திவேலூர்:

    அகில இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளருமான சண்முகப்பா பரமத்தி–வேலூரில் நிருபர்களிடம்  கூறியதாவது:

    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்தால் தான் லாரி தொழில் இலாபகரமான நடத்த முடியும்.

    டீசல், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்காததால் அண்டை மாநிலங்களுக்கு சென்று சரக்கு வாகனங்கள் எரிபொருளை பிடித்து வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கலாவதியான சுங்சாவடிகளை அகற்ற வேண்டும்.

    பழைய மற்றும் புதிய வாகனங்களுக்கு ஆயுள் வரி 6 சதவீகிதம் மட்டுமே வசூலித்தால் அரசுக்கு  வருவாய் அதிகரிக்கும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் டீசல் விலை குறைக்கப்படுகிறது. ஆனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உட்பட தென்மாநிலங்களில் விலை குறைக்கபடாதது அதிர்ச்சியை அளிக்கிறது.

    சரக்கு வாகனங்கள் ஜி.எஸ்.டி வரி செலுத்துவதன் மூலம் ஒளிவு மறைவின்றி சரக்கு எடுத்து செல்லப்படுவதால் ஆர்.டி.ஒ செக் போஸ்ட்களை அகற்ற வேண்டும்.கொரோனா காலத்திலும் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

    லாரி உரிமையாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். இது குறித்து போக்குவரத்து அமைச்சர் தமிழக முதல்வரிடம் எடுத்து கூறி சுமூக தீர்வை ஏன்படுத்தி தருவார் என எதிர்பார்க்கிறோம்.

    மத்திய,மாநில அரசுகள் வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை  குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    ×