என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி படுகாயம்-டிரைவர் கைது
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஆனங்கூர் ரோடு பழைய அஞ்சல் அலுவலகம் அருகே வசிப்பவர் சுரேஷ் (வயது 30). கட்டிட கூலி தொழிலாளி.
இவர் தனது மொபட் வாகனத்தில் ஒட்டன்கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் சுரேஷ் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவர் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்ததில் லாரி டிரைவர் திருச்சியை சேர்ந்த (சுரேஷ் 45), என்பது தெரியவந்தது. லாரி டிரைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
Next Story