என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விபத்தில் பலியான பெண்.
  X
  விபத்தில் பலியான பெண்.

  லாரி கவிழ்ந்து பெண் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகை அருகே லாரி கவிழ்ந்து பெண் பலியானார்.
  நாகப்பட்டினம்:

  நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் கல்பனா (வயது 40). இவர் கீச்சாங்குப்பம், சாமந்தான் பேட்டை, நம்பியார் நகர் உள்ளிட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண்களுடன் இணைந்து தினமும் லாரியில் மீன்களை ஏற்றி கொண்டு வியாபாரம் செய்து வருவது வழக்கம்.

  அதன்படி இன்று அதிகாலை கல்பனா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வேம்பு (52), பொன்னாச்சி (63), மீனாட்சி (45), பட்டம்மாள் (60), சத்யா (44) உள்ளிட்ட 7 மீனவ பெண்களுடன் சேர்ந்து டெம்போ லாரியில் மீன் லோடு ஏற்றிக் கொண்டு வியாபாரம் செய்வதற்கு திருவாரூர் நோக்கி புறப்பட்டார். 

  லாரியை கரிகாலன் என்பவர் ஓட்டினார்.அப்போது கீழ்வேளூர் அருகே சென்ற போது லாரியின் பின் பக்க டயர் திடீரென வெடித்தது.

   இதனால் நிலை தடுமாறிய லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. லாரியில் இருந்த பெண்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர்.

  இந்த விபத்தில் கல்பனா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.  வேம்பு, மீனாட்சி, பட்டம்மாள் உள்ளிட்ட 7 பெண்கள் மற்றும் டிரைவர் கரிகாலன் ஆகிய 8 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

  அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

  அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×