search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பெட்ரோல், டீசல் கலால் வரியை குறைக்க வேண்டுகோள்

    பெட்ரோல், டீசல் கலால் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பரமத்திவேலூர்:

    அகில இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளருமான சண்முகப்பா பரமத்தி–வேலூரில் நிருபர்களிடம்  கூறியதாவது:

    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்தால் தான் லாரி தொழில் இலாபகரமான நடத்த முடியும்.

    டீசல், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்காததால் அண்டை மாநிலங்களுக்கு சென்று சரக்கு வாகனங்கள் எரிபொருளை பிடித்து வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கலாவதியான சுங்சாவடிகளை அகற்ற வேண்டும்.

    பழைய மற்றும் புதிய வாகனங்களுக்கு ஆயுள் வரி 6 சதவீகிதம் மட்டுமே வசூலித்தால் அரசுக்கு  வருவாய் அதிகரிக்கும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் டீசல் விலை குறைக்கப்படுகிறது. ஆனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உட்பட தென்மாநிலங்களில் விலை குறைக்கபடாதது அதிர்ச்சியை அளிக்கிறது.

    சரக்கு வாகனங்கள் ஜி.எஸ்.டி வரி செலுத்துவதன் மூலம் ஒளிவு மறைவின்றி சரக்கு எடுத்து செல்லப்படுவதால் ஆர்.டி.ஒ செக் போஸ்ட்களை அகற்ற வேண்டும்.கொரோனா காலத்திலும் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

    லாரி உரிமையாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். இது குறித்து போக்குவரத்து அமைச்சர் தமிழக முதல்வரிடம் எடுத்து கூறி சுமூக தீர்வை ஏன்படுத்தி தருவார் என எதிர்பார்க்கிறோம்.

    மத்திய,மாநில அரசுகள் வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை  குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×