search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "testing"

    • பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • பறக்கும் படை அதிகாரிகள் குன்னூரில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    அருவங்காடு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, பொதுமக்களுக்கு பரிசு மற்றும் பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை சாவடிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டு பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களின் கார்கள், வேட்பாளர்களின் கார்களிலும் பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று பறக்கும் படை அதிகாரிகள் குன்னூரில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    குன்னூர் வண்டிப்பேட்டையில் தி.மு.க நகர அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 பேர் கொண்ட பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை வந்தனர். அவர்கள் அலுவலகத்தில் உள்ள அறைகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் எதுவும் அங்கு சிக்கவில்லை. சில மணி நேர சோதனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

    • மண் பரிசோதனை செய்து நச்சுத்தன்மையை கணக்கிட வேண்டும்.
    • பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உதவிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    எண்ணெய் கழிவு கலந்த பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க சில பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியமானதாகும். எண்ணெய் படிந்த பகுதி மற்றும் எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட தாவரங்களை எடுத்து பரிசோதிக்க வேண்டும். மேலும் எண்ணெய் ஓடிய பகுதியில் மண் பரிசோதனை செய்து நச்சுத்தன்மையை கணக்கிட வேண்டும்.

    நிலத்தின் உள்பகுதியில் நீண்ட தூரம் எண்ணெய் ஊடுருவி இருக்கலாம் என கருதினால் நிலத்தடி நீர் சோதனையும் மேற்கொள்ள வேண்டும். இது போன்ற பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் எண்ணெய் கசிவின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

    இது தவிர பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உதவிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    • யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
    • பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    கோவை:

    கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 12 மணி நேரத்தில் கேரளாவில் 280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர்.

    தொடர்ந்து கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து, கேரள மாநில எல்லையொட்டி இருக்கும் தமிழக பகுதிகளான கோவை, நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    கேரள மாநிலத்தையொட்டி உள்ள தமிழக எல்லையில் அமைந்துள்ளது கோவை மாவட்டம்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு தினந்தோறும் வேலை, தொழில், கல்லூரி சம்பந்தமாக ஏராளமானோர் கோவைக்கு வருவதும், இங்கிருந்து பலர் கேரளாவுக்கும் சென்று வருகிறார்கள்.

    தற்போது கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கோவை மாவட்ட எல்லைகளான வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைகட்டி உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அங்கு மருத்துவ குழுவினர், போலீசார் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அந்த வழியாக கேரளாவில் இருந்து கோவைக்குள் வரக்கூடிய வாகனங்களை தடுத்து நிறுத்தி, அதில் இருக்கும் பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

    அதில் யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    மேலும் அவர்களின் சளி மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்த பின்னரே அவர்களை கோவைக்குள் அனுமதித்து வருகின்றனர்.

    கோவையில் பொது மக்கள், பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிகளுக்கு காய்ச்சலுடன் வருபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இருமல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளான நாடுகாணி, கக்கநல்லா உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு ள்ளது.

    அந்த வழியாக கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் பயணிகள் அனைவரும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

    பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நீலகிரி கலெக்டர் அருணா கூறியதாவது:-

    கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் வருவோரின் உடல் வெப்ப நிலை, சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

    இதுவரை 30 பேரின் சளி மாதிரிகள் சேகரி க்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. எனவே பொது மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மது விற் பனை நடைபெறுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • ரூ.38,௬௮௦ ஆகியவற்றை கைப்பற்றி காடாம்புலியூர் போலீசில் ஒப்படை த்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி ஒன்றியம் முத்தாண்டி குப்பம் அடுத்த வல்லம் பஸ்நிறுத்தம் அருகே சட்ட விரோதமாக மது விற் பனை நடைபெறுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனைத்தொடர்ந்து கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி படை போலீசார் சோதனை செய்த தில் ரூ10லட்சம் மதிப்பிலான 1,245 மது பாட்டில்கள்மற்றும் பணம் ரூ.38,680ஆகியவற்றை கைப்பற்றி காடாம்புலியூர் போலீசில் ஒப்படை த்தனர்.காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பாப்பன் கொல்லை குமார் ,அருள்முருகன்ஆகியோர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பஸ் நிலையத்தில் திடீரென வாகன சோதனை நடத்தினர்.
    • சரியாக உள்ளதா அதிகமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது.

    கடலூர்:

    சிதம்பரத்தில் இருந்து புவனகிரி வழியாக கடலூர், விருத்தாசலம் செல்லும் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதை தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா மற்றும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் பஸ் நிலையத்தில் திடீரென வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்களில் ஏறி கட்டண சீட்டுகளைப் பெற்று அவை சரியாக உள்ளதா அதிகமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அதிக கட்டணம் வசூலித்த பஸ்சுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறுகையில் அனைத்து பஸ் கண்டக்டர்களும் சரியான பயணச்சீட்டையே பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

    • தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
    • ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

    அதிராம்பட்டினம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதிராம்பட்டினம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மீனாட்சி மருத்துவமனையில் இருந்து வருகை தந்த டாக்டர்கள், செவிலியர்கள் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை என உடல் முழு பரிசோதனை செய்தனர்.

    இம்முகாமில் அதிராம்பட்டினம் நகர் மன்ற தலைவர் தாகிராஅம்மாள் அப்துல்கரீம், நகர் மன்ற துணைத் தலைவர் ராமகுணசேகரன், ஆணையர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு உடல் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

    • 250 மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    • மதிய உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் புலிவலம், காட்டாற்று பாலம், கூடூர், மாங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 640 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தினந்தோறும் 250 மாணவ மாணவிகளுக்கு இங்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் எப்போதும் போல் நேற்று புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.

    மதிய உணவு உட்கொண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளியில் மயக்கம் அடைந்துள்ளனர்.

    அதனையடுத்து மயக்கம் அடைந்த மாணவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதித்தனர்.

    இதில் சௌமியா மற்றும் காவியா ஆகிய இரண்டு மாணவிகளுக்கு உடல்நலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் 7ம் வகுப்பு படித்து வரும் ஜெகதீஸ்வரன் தர்ஷன் சாரநாதன் சஞ்சனா சுபலட்சுமி மாதேஷ் மற்றும் 6ம் வகுப்பு மாணவர்கள் முகேஷ் நிவாஸ் ஆகியோர் தனி வார்டில் அனுமதி க்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    சிகிச்சை பெற்று வரும் மாணவ மாணவிகளையும் அவர்களது பெற்றோ ர்களையும் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, பூண்டி கலைவாணன் எம். எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இது தொடர்பாக திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் மதிய உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும் எனவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
    • சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை கடற்கரையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

    இதில் கடலோர பாதுகாப்பு படை காவல் உதவி ஆய்வாளர் ரகுபதி தலைமையில் போலீசார் தொண்டியக்காடு, தம்பிக்கோட்டை, கீழக்காடு, ஜாம்புவானோடை, சின்னான் கொள்ளைக்காடு உள்ளிட்ட இடங்களில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

    மேலும், முத்துப்பேட்டை நகர் பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு தமிழ்மாறன், சட்டம் ஒழுங்கு டி.எஸ்.பி. சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் ஆலங்காடு, தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார் டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பார்வையிட்டார். அப்போது ஏ.டி.ஜி.பி வெள்ளத்துரை உடன் இருந்தார்.

    • வேதாரண்யம் கடலோரப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை துவங்கி இன்று மாலைவரை நடைபெறுகிறது.
    • மீனவ கிராமங்களில் 40க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோரப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர்கவஜ் ஆப்ரேஷன் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை துவங்கி இன்று மாலைவரை நடைபெறுகிறது.

    ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி.சுந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் சென்று ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர் .

    வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு போன்ற மீனவ கிராமங்களில் 40க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தர வேண்டும் என முன்னெச்சரிக்கை செய்து வருகின்றனர்.

    நேற்று காலை துவங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் சாகர்கவஜ்ஆபரேஷன் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

    • பன்னோக்கு மருத்துவ முகாம்களில் உயர்தர பரிசோதனை வழங்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
    • பரிசோதனை இலவசமாக வழங்கப்படுகிறது.

    கீழக்கரை

    கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள டி.மாரியூர் கிராமத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்து வத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசிய தாவது:-

    இந்த முகாமில் 32 சிறப்பு மருத்துவர்கள், 167 செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பணி மேற்கொண்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்கு இணையாக பன்னோக்கு உயர்தர மருத்துவ பரிசோ தனை இலவசமாக வழங்கப் படுகிறது.

    கிராமங்களில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். தேவைப்படும் நபர்களுக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் உயர்தர சிகிச்சை வழங்கப்படும். அதுமட்டுமின்றி காப்பீடு அட்டை பெறாதவர்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்து இந்த முகாமில் காப்பீடு அட்டை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் உள்பட 20 பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களும், மக்களை தேடி மருத்துவத்திட்டத்தில் 30 பயனாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் கொண்ட தொகுப்புகளையும் அமைச்சர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல்சு, காதாரப்பணிகள் துணை இயக்குநர் இந்திரா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) அபிதா ஹனிப், காசநோய் பிரிவு துணை இயக்குநர் சிவானந்தவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி தொடங்கி வைத்தார்.
    • முகாமில் 6 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காச நோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

    முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி தொடங்கி வைத்தார். சித்த மருத்துவ அலுவலர் செல்வகு மார், மாவட்ட நலக் கல்வியா ளர் முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வை யாளர் இசக்கி மகாராஜன் வரவேற்று பேசினார். டி.வி.எஸ். சீனி வாசன் சேவைகள் அறக் கட்டளையின் கள இயக்குநர் விஜயகுமார் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டார். முகாமில் 25 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப் பட்டது.

    6 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார்.

    முகாமில் எக்ஸ்ரே நுட்புனர் கிறிஸ்டின் குமார தாஸ், இருட்டறை உதவி யாளர் எட்டையா, சுகாதார பார்வையாளர் முத்து லட்சுமி, அரி பாலகிருஷ்ணன், டி.வி.எஸ்.சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சமுதாய வளர்ச்சி அலுவலர் பரமசிவம், கிராம வளர்ச்சி அலுவலர் தனுஷ்கோடி, சுகாதா ரத்துறை பணியா ளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • பல ஆண்டுகளுக்கு முன்பு வங்கி எதிர்புறம் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டது.
    • வங்கிக்கும், ரேசன் கடைக்கும் வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு பகுதியில் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் ரேசன் கடை இயங்கி வருகிறது. வங்கிக்கும், ரேசன் கடைக்கும் 100-க்கும் மேற்பட்டவர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வங்கி எதிர்புறம் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டது.

    ஆனால், தற்போது அந்த சோதனை சாவடி கட்டிடம் மிகவும் பாழடைந்த நிலையில் மூடப்பட்டு யாரும் பயன்படுத்த முடியாத வகையில் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளிக்கிறது.

    இதனால் அருகில் உள்ள வங்கிக்கும், ரேசன் கடைக்கும் வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    எனவே, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக இந்த சோதனை சாவடி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×