search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொல்லிமலை அடிவாரத்தில் தீவிர வாகன சோதனை
    X

    கொல்லிமலை அடிவாரத்தில் தீவிர வாகன சோதனை

    • நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள்.
    • இதனையடுத்து கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி சோதனை சாவடியில், வன காப்பா ளர்கள், ஊழியர்கள் அனைத்து வாகனங்களையும் சோதனை நடத்தினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள். அவர்கள் அங்குள்ள இயற்கை அழகை பார்த்து ரசிப்பதுடன் அருவிகளிலும் குளித்து மகிழ்வார்கள்.

    சமீப காலமாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் செல்பவர்கள் மலை பாதையின் கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள தடுப்பு சுவரில் அமர்ந்து மது அருந்துவதாக புகார் எழுந்தது. மேலும் காலி மது பாட்டில்களை அவர்கள் வீசி எறியும்போது, அதனை எடுத்து செல்லும் குரங்குகள் மீதம் இருக்கும் மதுவையும் பருகி உடல் உபாதைக்கு ஆளாகி வந்தன.

    இதனையடுத்து கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள

    காரவள்ளி சோதனை சாவடியில், வன காப்பா ளர்கள், ஊழியர்கள் அனைத்து வாகனங்களையும் சோதனை நடத்தினர். அப்போது வாகனங்களில் பதுக்கி எடுத்துச் செல்ல முயன்ற மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், மதுவை கீழே ஊற்றி அதனை அழித்தனர்.

    கொல்லிமலைக்கு செல்வோரும், இங்கிருந்து

    அடிவாரப் பகுதிக்கு வருவோரும் விலங்குக ளின் நலன் கருதி மது பாட்டில்களை கொண்டு செல்ல வேண்டாம். தடுப்பு சுவரில் அமர்ந்து மது அருந்த வேண்டாம். சாலையில் காலி பாட்டில்களை உடைத்து சேதப்படுத்த கூடாது. வனத்துறையின் சட்ட விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×