search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Veterinary Camp"

    • கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • 250 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மங்கலம் :

    கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பரமசிவம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் உமாசங்கர், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் சாமளாபுரம் கால்நடை மருத்துவர் பிரியலட்சுமி, சாமிக்கவுண்டம்பாளையம் கால்நடை மருத்துவர் செந்தில்முருகன், மற்றும் கால்நடை உதவியாளர் காயத்ரி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் மாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசியும், நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.மொத்தமாக 250 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இம்முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் மேனகா பாலசுப்பிரமணி, மைதிலிபிரபு மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முகாமில் சிறந்த கிடாரிகன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் கால்நடை புத்தாக்கப்பயிற்சியில் கலந்து கொண்ட 25 விவசாயிகளுக்கு தலா 100ரூபாய் வழங்கப்பட்டது.

    • செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சி பால மார்த்தாண்டபுரத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், மலட்டு நீக்க சிகிச்சை, செயற்கை முறை இன விருத்தி,தடுப்பூசி பணிகள், கால்நடைகள் மேலாண்மை மற்றும் கன்றுகள் பேரணி நடைபெற்றது.

    தென்காசி:

    செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சி பால மார்த்தாண்டபுரத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், மலட்டு நீக்க சிகிச்சை, செயற்கை முறை இன விருத்தி,தடுப்பூசி பணிகள், கால்நடைகள் மேலாண்மை மற்றும் கன்றுகள் பேரணி நடைபெற்றது. சிறந்த கலப்பின கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் முன்னிலை வகித்தார்.

    கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் மற்றும் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். நெல்லை கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் கால்நடை பண்ணை தியோ பிளஸ் ரோஜர், உதவி இயக்குனர் ஜான் சுபாஷ் ஆகியோர் தொழில்நுட்ப உரையாறறினர்.

    தென்காசி கால்நடைத்துறை உதவி இயக்குனர் மகேஸ்வரி வாழ்த்துரை வழங்கினார். மேலும் இதில் மருத்துவர்கள் செல்வகுத்தாலிங்கம், வெள்ளைபாண்டி, சிவக்குமார்,வசந்த மலர், செல்லப்பா ஆகியோர் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.


    ×