என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான பசுபதி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகள்.
சாராயம் கடத்திய வாலிபர் கைது
- போலீசார் மயிலாடுதுறையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
- சுமார் 200 லிட்டர் சாராயம் காரைக்காலில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு அன்பழகன், உள்ளிட்ட போலீசார் மயிலாடுதுறையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது அந்த வழியாக காரை மறித்து சோதனை செய்தனர். அதில் சுமார் 200 லிட்டர் சாராயம் காரைக்காலில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மயிலாடுதுறை நீடூர் பகுதி பல்லவராயன் பேட்டை சேர்ந்த பசுபதி (வயது 23) என்பவரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






