போலீசார் வாகன சோதனையில் சிக்கிய பிரபல கொள்ளையர்கள்

நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார் நாமக்கல், திருச்சி ரோட்டில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தது அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் 2 பேரையும், போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர்கள் வந்த கார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
போலீசார் வாகன சோதனையில் சிக்கிய பிரபல கொள்ளையர்கள்
Published on

நாமக்கல்:

நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார் நாமக்கல், திருச்சி ரோட்டில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தது அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் காரில் இருந்தவர் திருச்சியை சேர்ந்த ராஜ்கமல் என்பதும், மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலகுமார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், ராஜ்கமல் மீது தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பாலகுமார் மீது சில வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. 2 பேரையும், போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர்கள் வந்த கார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com