என் மலர்

  நீங்கள் தேடியது "Manoor Pond"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 20 கிராங்களில் உள்ள பாசன குளங்கள் முதல்கட்டாக புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
  • நெல்லை மாவட்டத்தில் 75 நீர் நிலைகளில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

  நெல்லை:

  சிறு பாசன குளங்கள், நீர் நிலைகள் புனரமைப்பு திட்ட தொடக்க விழா நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  சிறு குளம் புனரமைப்பு திட்டத்தின் கீழ் மானூர் யூனியனுக்குட்பட்ட 20 கிராங்களில் உள்ள பாசன குளங்கள் முதல்கட்டாக புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக இந்த பணிகள் முடிவடையும்.

  இதனால் அங்கு மழைக்காலங்களில் கூடுதலான தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அடுத்த ஆண்டுக்குள் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதேபோல் திசையன்விளையில் உள்ள அதிசய கிணறு மூலமும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

  நெல்லை மாவட்டத்தில் 75 நீர் நிலைகளில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மழைக் காலங்களில் நெல்லை மாநகராட்சி பகுதிக்கு திருப்பணி கரிசல்குளத்தில் இருந்து தண்ணீர் புகும். இதனை தடுக்க திருப்பணிகரிசல்குளத்தில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் செல்லும் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.

  இதனால் மழைக்காலங்களில் மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் தேங்குவது தடுக்கப்படும்.

  2018-19-ம் ஆண்டு 3 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால் அங்குள்ள 139 கிணறுகளில் 3 மாதம் மட்டுமே காணப்பட்ட தண்ணீர் தற்போது 9 மாதங்கள் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ×