search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bad smell"

    • சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.
    • பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் குடிநீரில் கழிவுநீர் கலந்துவிட்டது.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், மேற்கு கரிகாலன் தெரு , கிழக்கு கரிகாலன் தெரு, டி.என்.ஜி.ஒ காலனி,ஆகிய பகுதி களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல வழியில்லாமல் வெளியேறி வருகிறது. குடி தண்ணீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் கழிவு நீர் வெளியேறி வீடுகள் முன்பு துர்நாற்றத்துடன் தேங்கி நிற்கிறது. குறிப்பாக மேற்கு கரிகாலன் 2-வது தெரு முட்டு சந்து என்பதால் அதிக அளவு தண்ணீர் வெளியே செல்ல வழியின்றி தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசிவருகிறது.

    கழிவு நீர் பல நாட்களாக தேங்கி நிற்பதால் நிலத்தடி நீரிலும் கலந்து போர்வெல் தண்ணீரையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் குடிநீரில் கழிவுநீர் கலந்துவிட்டது. இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லாரிகள் மூலமாக குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யவில்லை. கழிவுநீர் செல்ல வழியின்றி வீடுகள் முன்பு தேங்கி நிற்கிறது. தினமும் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகிறோம். இப்பகுதியில் நோய்தொற்று பரவும் முன்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சாலைகளில் இறைச்சி கழிவுகளும் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
    • தீ வைத்து எரிப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    அதிராம்பட்டினம்:

    அதிராம்பட்டினம்- மல்லிப்பட்டினம் கடற்கரை சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்து கிடக்கிறது. குப்பைகள் மட்டுமின்றி இறைச்சி கழிவுகளும் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

    மேலும், சில நேரங்களில் குப்பைகளை மர்மநபர்கள் சிலர் தீ வைத்து எரிப்பதால் அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வந்த மோட்டார் திடீரென்று பழுதானதால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரக்கூடிய கழிவுநீர் முழுவதும் அந்தபகுதியில்உள்ள வீடுகளை சூழ்ந்தது,
    • அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் வீடுகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்து பாதாள சாக்கடை மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மூலம் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.கடலூர் தேவனாம்பட்டினம் கேகே நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகின்றது. இதில் அந்த சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வரக்கூடிய பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வந்தது.கடந்த சில தினங்களாக சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வந்த மோட்டார் திடீரென்று பழுதானதால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரக்கூடிய கழிவுநீர் முழுவதும் சுத்திகரித்து வெளியேற்ற முடியாமல் தற்போது கழிவுநீர் முழுவதும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்து உளளது.தற்போது வீடுகளை சுற்றியும் கழிவு நீர் முழுவதும் குளம் போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகின்றது. இது மட்டும் இன்றி தற்போது கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லைஇதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு மக்களுக்கு மர்ம காய்ச்சல், வாந்தி மயக்கம் ,வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்எனவே பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவையான சுகாதாரத்தை அதிகாரிகள் ஏற்படுத்தி நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • சேதமடைந்த சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரி, ஆலங்குடி, மூங்கில்குடி, செம்பியன்மகாதேவி, இருக்கை, மகாதானம் சுக்கானூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்ப ட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் கன மழையால் வயல்களை மழைநீர் சூழ்ந்தது. நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு 10 தினங்களில் தயாராக இருந்த 5000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நெல் மணிகள் முளைத்து சேதமடைந்துள்ளது.

    சேதமடைந்த சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது.

    இதுவரை வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிடவே இல்லை எனவும் உடனடியாக தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறைப்படி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழைய கட்டண கழிப்பறையும் இடிக்கப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
    • துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பழைய பேருந்து நிலைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் இருந்த பழைய கட்டண கழிப்பறையும் இடிக்கப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கழிவறையை இடித்த போதும், செப்டிக் டே ங்க் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் பஸ் நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இங்குள்ள புத்து மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும், பஸ் ஏற வரும் பொது மக்களுக்கும் மூக்கை மூடிக் கொண்டு செல்லும் அவல நிலை தொடர்கிறது.

    குறிப்பாக, துர்நா ற்றத்தால் வயதானவர்களுக்கு மூச்சடைப்பு ஏற்படுகிறது, இங்கு பஸ் ஏற ஏராளமான பள்ளி மாணவர்கள் வருவதால், அவர்கள் தவறி செப்டிக் தொட்டியில் விழுவதற்கும் வாய்ப்புள்ளது. ஆகையால் உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு செப்டிக் டேங்க் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். செப்டிக் டேங்க்கை சுற்றிலும் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மந்தமாக நடந்து வரும் பஸ் நிலைய கட்டுமான பணியினை விரைந்து முடிக்க வேண்டும். அதுவரை தற்காலிக கழிவறை ஏற்படுத்தி தரவேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திண்டிவனம் அய்யன்தோப்பு பகுதியில் பொதுக்குளம் ஒன்று உள்ளது.
    • அந்த மூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசி குளத்தை அசுத்தம் செய்தது.

    விழுப்புரம்: 

    திண்டிவனம் அய்யன்தோப்பு பகுதியில் பொதுக்குளம் ஒன்று உள்ளது. இந்த பொதுக்குளத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி தினமான இன்று விநாயகர் மண் சிலைகள் வாங்கி பொதுமக்கள் பூஜை செய்வார். பின்னர் அந்த விநாயகர் மண் சிலைகளை செப்டம்பர் 1,2-ம் நாட்களில் குளங்களில் கரைப்பர். இதனால் இந்த விநாயகர் மண் சிலைகளை கரைப்பதற்காக பொதுக்குளத்தை பொதுமக்கள் பார்வை யிட்டனர். அப்போது அக்குளத்தில் பெரிய மூட்டை ஒன்று மிதந்து வந்தது.

    மேலும் அந்த மூட்டியிலிருந்து துர்நாற்றம் வீசி குளத்தை அசுத்தம் செய்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து ரோசனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ரோசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையிலான போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். பின்னர்குளத்தில் இருந்தமூட்டையை வெளியே கொண்டு வந்து பார்த்த போது அதில் கோழிக்கழிவுகள் இருந்தது தெரியவந்தது. பொதுக்குழுத்தில் கோழிக்கழிவுகளை வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் சரவணா நகரில் துர்நாற்றத்துடன் கலங்கலான குடிநீர் வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • ஒரு ஆண்டு காலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தண்ணீர் பழுப்பு நிறத்திலும் கலங்கலாக தண்ணீர் வருகிறது.

    கடலூர்: 

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரில் மக்கள் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் தேக்க தொட்டியில் இருந்து கடலூர் மையப்பகுதிகளில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் சரவணநகர், நாராயண நகர், விஜயதாஸ் நகர், பொன் நகர், அண்ணாமலை நகர், கேசவன் நகர், முத்தையா நகர், அம்பேத்கர் நகர், மார்க்கெட் காலனி தானம் நகர், நவநீதம் நகர், குமரன் நகர் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரில் உள்ள நீர்த்தேக்க தொட்டி ஒரு ஆண்டு காலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தண்ணீர் பழுப்பு நிறத்திலும் கலங்கலாக தண்ணீர் வருவதாக மாநகராட்சி ஊழியர்களுக்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் வாந்தி வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்ட உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் நிலவி உள்ளது. மேலும் வருங்காலங்களில் மழைக்காலம் என்பதால் மேற்கொண்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நீக்க தொட்டியை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    ×