சாலையோரம் குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

சாலைகளில் இறைச்சி கழிவுகளும் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. தீ வைத்து எரிப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சாலையோரம் குப்பைகள் எரிக்கப்படுகிறது.
சாலையோரம் குப்பைகள் எரிக்கப்படுகிறது.
Published on

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம்- மல்லிப்பட்டினம் கடற்கரை சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்து கிடக்கிறது. குப்பைகள் மட்டுமின்றி இறைச்சி கழிவுகளும் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், சில நேரங்களில் குப்பைகளை மர்மநபர்கள் சிலர் தீ வைத்து எரிப்பதால் அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com