திண்டிவனத்தில் பொது குளத்தில் கோழி கழிவுகளை வீசும் மர்ம நபர்கள்

திண்டிவனம் அய்யன்தோப்பு பகுதியில் பொதுக்குளம் ஒன்று உள்ளது.அந்த மூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசி குளத்தை அசுத்தம் செய்தது.
திண்டிவனத்தில் பொது குளத்தில் கோழி கழிவுகளை வீசும்  மர்ம நபர்கள்
Published on

விழுப்புரம்: 

திண்டிவனம் அய்யன்தோப்பு பகுதியில் பொதுக்குளம் ஒன்று உள்ளது. இந்த பொதுக்குளத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி தினமான இன்று விநாயகர் மண் சிலைகள் வாங்கி பொதுமக்கள் பூஜை செய்வார். பின்னர் அந்த விநாயகர் மண் சிலைகளை செப்டம்பர் 1,2-ம் நாட்களில் குளங்களில் கரைப்பர். இதனால் இந்த விநாயகர் மண் சிலைகளை கரைப்பதற்காக பொதுக்குளத்தை பொதுமக்கள் பார்வை யிட்டனர். அப்போது அக்குளத்தில் பெரிய மூட்டை ஒன்று மிதந்து வந்தது.

மேலும் அந்த மூட்டியிலிருந்து துர்நாற்றம் வீசி குளத்தை அசுத்தம் செய்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து ரோசனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ரோசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையிலான போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். பின்னர்குளத்தில் இருந்தமூட்டையை வெளியே கொண்டு வந்து பார்த்த போது அதில் கோழிக்கழிவுகள் இருந்தது தெரியவந்தது. பொதுக்குழுத்தில் கோழிக்கழிவுகளை வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com