என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய பொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும்
    X

    அபிராமத்தில் மிளகாய் ஏற்றுமதி கருத்தரங்கை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    விவசாய பொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும்

    • விவசாய பொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசினார்.
    • குறிப்பாக மிளகாய் ஏற்றுமதியில் முதன்மை மாவட்டமாக இருந்து வருகிறது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தோட்டக்கலை மற்றும் பணப்பயிர்கள் துறையின் மூலம் மிளகாய் ஏற்றுமதி குறித்த கருத்தரங்கம் நடந்தது. அதனை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வரு கிறது. குறிப்பாக மிளகாய் ஏற்றுமதியில் முதன்மை மாவட்டமாக இருந்து வருகிறது. பொதுவாக விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு விவசாயம் செய்து வருவதுடன் பல்வேறு தொழில்நுட்பத்துடன் செயல்பட்டு சிறந்த முறையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதே வேளையில் உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்துதலில் ஆர்வம் காட்டவேண்டும். எந்த அளவுக்கு பொருட்களை உற்பத்தி செய்கிறோமோ அந்த அளவுக்கு பொருட்களை சந்தைப்படுத்துவதில் ஆர்வம் காட்டவேண்டும்.

    அப்தபோதுதான் சரியான லாபம் கிடைப்ப துடன் வரும் காலங்களில் விவசாய பணிகளை அதிக அளவு மேற்கொள்ளவும் உள்பத்தியை அதிகரிக்கவும் முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் நாகராஜன், உதவி இயக்குநர்கள் ரமேஷ், சிவகுமார். பிரியங்கா, ஜெகதீசன்.ரவிகுமார்,க முதி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி போஸ். விவசாய சங்க தலைவர்கள் முத்துராமலிங்கம், அருணா சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×