என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட மதுரை மக்கள் திரள வேண்டும்
    X

    மதுரையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். அருகில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், கணேஷ்பிரபு, பரவை ராஜா, சோலைராஜா, பைக்காரா கருப்புசாமி, சண்முகவள்ளி, முத்துகிருஷ்ணன், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட மதுரை மக்கள் திரள வேண்டும்

    • தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட மதுரை மக்கள் திரள வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
    • மேலும் மாநகர பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

    மதுரை

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு நாள் வருகிற 5-ந் தேதி கடை பிடிக்கப்படுகிறது. மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அன்றைய தினம் மவுன ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை காமராஜர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவை தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.துணை செயலாளர் வில்லா புரம் ராஜா முன்னிலை வைத்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு ஆலோ சனைகள் வழங்கி பேசிய தாவது-

    அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, முதியோர் உதவித்தொகை, என்று அனைத்து நலத்திட்டங்களை யும் ரத்து செய்துவிட்டு மு.க. ஸ்டாலின் அ.தி.மு.க. அரசை குறை கூற என்ன தகுதி இருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மின் கட்டணத்தை குறைப்போம் என்று சொன்ன அவர்கள் தற்போது ஆதாரை இணை யுங்கள் என்று பிரச்சினை யை திசை திருப்பு கிறார்கள்.

    மது கடையை மூடுவோம் என்றார்கள். ஆனால் டார்கெட் வைத்து மதுவை விற்பனை செய்கிறார்கள். தி.மு.க. எப்போதும் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.எனவே வருகிற பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி.

    புரட்சி தலைவியின் அவரது நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் வருகிற 5-ந் தேதி காலை கே.கே.நகரில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. மேலும் மாநகர பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். அன்று மாலை 4 மணி அளவில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து நேதாஜி ரோடு மேலமாசி வீதி வழியாக மேலமாசி வீதி-வடக்கு சந்திப்பு வரை ஊர்வலமாக வந்து புரட்சித்தலைவி அம்மாவு க்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்த உள்ளோம்

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மட்டுமல்ல. தி.மு.க. அரசால் பாதிக்கப்பட்ட மதுரை மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தி.மு.க. அரசுக்கு சரியான பாடத்தை புகட்ட ஓரணியில் திரள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், கணேஷ்பிரபு, பரவை ராஜா, சோலை ராஜா, சண்முக வள்ளி, சுகந்திஅசோக், குமார், பாஸ்கரன், மாயத்தேவன், கே.வி.கே.கண்ணன், பார்த்திபன், பரமேஸ்வரன், கறிக்கடை முத்துகிருஷ்ணன், கலைச் செல்வம், புதூர் அபுதாகிர், ரமேஷ், முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×