என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் - நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    X

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பேசியனார்.

    தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் - நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

    • கூட்டத்திற்கு நகர செயலாளர் சுப்பராயன் தலைமை வகித்தார்.
    • அனைத்து தரப்பு திட்டங்களை செயல்படுத்தி நல் ஆளுமையுடன்ஆட்சி நடைபெறுகிறது.

    சீர்காழி:

    சீர்காழியில் நடை பெற்ற நகர தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு நகர செயலாளர் சுப்பராயன் தலைமை வகித்தார்.

    மாவட்ட நிர்வாகிகள் முத்து.மகேந்திரன், அலெக்சாண்டர், முருகன், சாமிநாதன், முத்து குபேரன், செல்வமுத்துகுமார், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், செல்ல.சேதுரவிக்குமார், நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். தொடர்ந்து மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டபேரவை உறுப்பினர் நிவேதா முருகன் பேசுகையில், திமுக அரசு பொறுப்பேற்றபோது கொரோனா பொதுமுடக்கம் போன்ற சவால்களை எதிர்கொண்டு சிறப்பாக அதனை சமாளித்தது.

    தொடர்ந்து கடந்த ஆட்சியில் அரசு கஜானாவை வெற்றிடமாக்கி வைத்தபோதும், அரசின் வருமானத்தை பெருக்கி அதன் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்தி நல் ஆளுமையுடன்ஆட்சி நடைபெறுகிறது என்றார்.

    இதில், நகர துணை செயலாளர் முத்து, சிவப்பிரியாதுரை நகரப் பொருளாளர் கோடங்குடி சங்கர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில், ஒப்பந்ததாரர் தனராஜ், நிர்வாகிகள் திருச்செல்வம், லெனின், துரை, சரவணன், பாருக் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×