search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "volume"

    • 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏமப்பூரில் பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரக்கூடிய தண்ணீர் வாய்க்கால் வழியாக வந்து ஏரி நிரம்பியது. இதனால் தி.மழவராயனூர் கிராம விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் அமைச்சர் பொன்முடி, ஏமப்பூர் ஏரி நீர் தேங்கியுள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டு பின் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, நீர்வள த்துறை செயற்பொறியாளர் சோபனா மற்றும் அதிகாரி கள், விவசாயிகளிடம் ஆலோ சனை நடத்தினார். அதன் பிறகு விவசாய பயிர்களில் தேங்கியுள்ள நீரினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அப்போது அவருடன் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.புகழேந்தி, செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர், அய்யப்பன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், தி.மு.க.ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான விசுவநாதன், ஒன்றிய குழுதலைவர் ஓம்சிவ சக்திவேல், தாசில்தார் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநி பக்தவச்சலு, ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரதிமோகன்ராஜ், தேவிசெந்தில், தி.மு.க.நகர செயலாளர் பூக்கடை கணேசன்,பேரூராட்சி துணைத் தலைவர் ஜோதி, ஆவின் இயக்குனர் விஜயபா பு,நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ்,மாவட்ட மருத்துவர் அணி அமை ப்பாளர் காவியவேந்தன், சிறுமதுரை செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • முடங்கி கிடந்த முதுகுளத்தூர் முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
    • கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகள் நிரந்தர பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தேவர் கல்லூரியில் பிற்பட்டோர் நல மாணவியர் விடுதி திறப்பு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு அலுவலா் பாண்டி வரவேற்றர். மாணவியர் விடுதியை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    முடங்கி கிடந்த முதுகுளத் தூர் தொகுதி முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் சமம். கட்சி பாகுபாடு இல்லாமல் மக்களின் தேவைகள் நிறை வேற்றப்பட்டு வருகின்றன. கமுதி மற்றும் முதுகு ளத்தூருக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    காவிரி குடிநீர் பிரச்சினை ஒரு ஆண்டில் முழுமையாக தீரும். பொது மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இங்கேயே ஒவ்வொரு வருக்கும் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

    கமுதியில் பாலிடெக்னிக் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடியில் தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகள் நிரந்தர பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவர் கல்லூ ரியில் கூடுதல் பாடப்பி ரிவுகள் கொண்டுவரவும், காலி இடங்களை நிரப்பவும், புதிய கட்டிட வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், கமுதி பேரூராட்சி சேர்மன் அப்துல் வஹாப் சகாரணி, ஒன்றிய செயலாளர்கள் முதுகுளத்தூர்பூபதி மணி, கோவிந்தராஜ், கடலாடி ஆறுமுகவேல், சாயல்குடி குலாம் முகைதீன், ஜெயபால், மணலூர் ராமர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கல்லூரி முதல்வர் அருணாசலம் நன்றி கூறினார்.=

    ×