search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரும்புத்தலை ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்
    X

    ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

    இரும்புத்தலை ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்

    • பாபநாசம், அய்யம்பேட்டை, சாலியமங்கலம் ஆகிய உப கோட்டங்களை சேர்த்து ஒரு புதிய மின் கோட்டத்தை உருவாக்க வேண்டும்.
    • பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்த பிரச்சனைகள் இருப்பதால், விவசாய பம்ப் மோட்டார்கள் வீடுகளில் உள்ள மின் சாதனப் பொருள்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன.

    பாபநாசம்:

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கேள்வி நேரத்தின் போது பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. எம்.எச். ஜவாஹிருல்லா பேசியதாவது :-

    பாபநாசம் உப கோட்டம், அய்யம்பேட்டை உப கோட்டம், சாலியமங்கலம் உப கோட்டம் ஆகிய உப கோட்டங்களை சேர்த்து ஒரு புதிய மின் கோட்டத்தை உருவாக்க வேண்டும்.

    பாபநாசம் தொகுதி இரும்புத்தலை ஊராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்த பிரச்சனைகள் இருப்பதால், விவசாய பம்ப் மோட்டார்கள் (மும்முனை மின்சார மோட்டார்கள்) மற்றும் வீடுகளில் உள்ள மின் சாதனப் பொருள்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன.

    எனவே இரும்புத்தலை ஊராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் மின் பிரச்சனையை போக்கிட துணை மின் நிலையத்தை அமைக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, கோரிக்கை அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அம்மாபேட்டை-பாபநாசம் ஆகியவற்றை இணைத்து ஓரு புதிய அலுவலகம் தொடங்கப்படும். இதேபோல் மின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கோரிக்கை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×