என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க.-பா.ஜ.க.வை தவிர எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைத்து செல்வோம்: அருண்ராஜ்
    X

    தி.மு.க.-பா.ஜ.க.வை தவிர எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைத்து செல்வோம்: அருண்ராஜ்

    • எஸ்ஐஆர் படிவங்களில் விடுபட்டவர்கள் பெயர்களை சேர்ப்பது குறித்து வீடு வீடாக சென்று பணிகள் மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
    • தமிழக வெற்றிக்கழக தலைமையை ஏற்று வருகிற கட்சிகளுடன் தான் கூட்டணி.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எஸ்ஐஆர் படிவங்களில் விடுபட்டவர்கள் பெயர்களை சேர்ப்பது குறித்து வீடு வீடாக சென்று பணிகள் மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. அடுத்த மக்கள் சந்திப்பு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளிவரும் .

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைய உள்ளது. அந்தக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமையும். எங்கள் தலைவர் முதல்வராக பதவியேற்பார். ஏற்கனவே எங்களது கொள்கை எதிரி யார்? அரசியல் எதிரி யார் என்பதை தெளிவாக அறிவித்து விட்டோம். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. தமிழக வெற்றிக்கழக தலைமையை ஏற்று வருகிற கட்சிகளுடன் தான் கூட்டணி. எங்கள் தலைவரை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி. தி.மு.க.- பா.ஜ.க.வை தவிர யார் எங்கள் தலைவரை முதலமைச்சராக ஏற்று கூட்டணிக்கு வந்தாலும் அரவணைத்து செல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×