என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழிப் பண்ணை"

    • பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள் மற்றும் கோழிகளுக்கும் வைரஸ் பரவுகிறது.
    • பண்ணை வளாகங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது.

    சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த காகங்களை பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது பறவைகளிடையே விரைவாகப் பரவக்கூடியது.பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது.

    மேலும், அவை வீடுகள் மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள் மற்றும் கோழிகளுக்கும் பரவுகிறது. சில நேரங்களில் மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளிலும் பரவக்கூடும். தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், பறவைக்காய்ச்சல் பரவுவதால், திருவள்ளூர் மற்றும் சென்னைப் புறநகரப்பகுதிகளில் கோழி இறைச்சி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

    சென்னையில் 3 நாட்களுக்கு முன்பு ரூ.280க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறி, தற்போது ரூ.220ஆக குறைந்துள்ளது

    • மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
    • பண்ணை வளாகங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது.

    சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த காகங்களை பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது பறவைகளிடையே விரைவாகப் பரவக்கூடியது.பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது.

    மேலும், அவை வீடுகள் மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள் மற்றும் கோழிகளுக்கும் பரவுகிறது. சில நேரங்களில் மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளிலும் பரவக்கூடும்.

    தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

    நாமக்கல், சேலம், ஈரோடு உள்பட நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,000 கோழிப்பண்ணைகளில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. 2 கோடிக்கும் அதிகமான பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிப் பண்ணைகளில் வெளியாட்கள் மற்றும் வாகனங்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டு, உயிரி பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பண்ணை வளாகங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது.

    நாமக்கல் மண்டலத்தில் சுகாதாரமான முறையில் கோழிப்பண்ணைகளை அமைத்து நடத்தி வருவதாலும், சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கோ, நாமக்கல்லில் இருந்து சென்னைக்கோ கோழிப்பண்ணை சம்மந்தமான முட்டை, தீவனம் போன்ற பொருட்கள் போக்குவரத்து நடைபெறுவதில்லை.

    இதனால் நாமக்கல் மண்டலத்தில் பறவைக்காய்ச்சல் தொற்று நோய் பரவ வாய்ப்பில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கோழிப்பண்ணை செயல்பட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • அதிகாரிகள் மீது நம்பிக்கை உள்ளதால், ரேஷன், ஆதார் கார்டு ஒப்படைக்கும் போராட்டத்தை தற்காலிமாக வாபஸ் பெற்றுள்ளோம்.

    தாராபுரம்:

    தாராபுரம் தாலுகா சின்னக்காம்பாளையத்தில் தனியார் கோழிப்பண்ணை உள்ளது. சுகாதார கேடு ஏற்படுவதால் இந்த கோழிப்பண்ணை செயல்பட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் 60 பேர் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை ஒப்படைப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: -சின்னக்காம்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணையால், குடியிருப்பு பகுதி மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. விவசாய நிலங்களில் நீர் மாசுபடுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 5ந்தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தபோது பண்ணைக்கு இனி கோழிகள் வராது என கலெக்டர் தெரிவித்தார். ஆனால் கடந்த 1ந்தேதி போலீசார் முன்னிலையில் 30 ஆயிரம் கோழிகள் வந்திறங்கியுள்ளன. கடந்த 3ந் தேதி நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் தெரிவித்தபோது அதிகாரிகள் குழுவை அனுப்பி ஆய்வு மேற்கொள்வதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து போராட்டம் நடத்த வந்தோம். கலெக்டர் இல்லாததால் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் எங்களிடம் பேச்சு நடத்தினார்.

    கோழிப்பண்ணை பகுதியில் விரைவில் ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்தார். அதிகாரிகள் மீது நம்பிக்கை உள்ளதால், ரேஷன், ஆதார் கார்டு ஒப்படைக்கும் போராட்டத்தை தற்காலிமாக வாபஸ் பெற்றுள்ளோம். நடவடிக்கை இல்லாவிடில் மீண்டும் போராடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×