என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truckers"

    • தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் உள்ளன.
    • எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சம்மேளன தலைவர் தன்ராஜ் தலைமை வகித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு லாரிக்கு தகுதி சான்று (எப்சி) பெறுவதற்கு ரூ. 850 ஆக இருந்த கட்டணத்தை மத்திய அரசு ரூ.28,200 ஆக உயர்த்தி உள்ளது. இதை அமல்படுத்துவதும், நிறுத்தி வைப்பதும் மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. பல மாநிலங்களில் இந்த கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அபரிதமான எப்.சி. கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். சுமார் 3 மாதங்களாகியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.

    அதன் காரணமாக தமிழகம் முழுவதும் 1 லட்சம் லாரிகள் தகுதி சான்று பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சரக்கு ஆட்டோ, வேன் (எல்சிவி) உள்ளிட்ட லட்சக்கணக்கான வாகனங்கள் தகுதி சான்று செய்யாமல் ஓட்ட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி சுமார் 1.5 கோடி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் தொடர்ந்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். அதன்படி எப்.சி. கட்டணத்தை ரத்து செய்யக்கோரி வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் காலவரையற்ற போராட்டம் தொடங்கும். சுமார் 20 லட்சம் வாகனங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும். வெளி மாநில லாரிகள் உள்ளிட்ட அனைத்து லாரிகளும் தமிழகத்தில் இயங்காது. ஏற்கனவே இக்கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை, கும்பகோணம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் கடந்த 16-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கினால் அத்தியாவசிய பொருட்களான முட்டை, கோழி தீவனம், காய்கறிகள் மற்றும் இரும்பு தளவாட சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    • நாடு முழுக்க லாரி, டிரக், பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தண்டனை காலத்தை பத்து ஆண்டுகளாக உயர்த்துவது தேவையற்ற ஒன்று.

    சாலை விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு தப்பி செல்லும் ஓட்டுநர்களுக்கு அதிகபட்சம் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில், சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க லாரி, டிரக், பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஓட்டுநர்கள் யாரும் திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்துவது இல்லை. இதற்காக மூன்று ஆண்டுகள் என்றிருந்த சிறை தண்டனை காலத்தை பத்து ஆண்டுகளாக உயர்த்துவது தேவையற்ற ஒன்று என கூறி ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

     


    புதிய தண்டனை சிட்டத்தில் உள்ள கடுமையான சிறை தண்டனை என்ற விதிக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அம்மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.

    இந்த நிலையில், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிரான லாரி ஓட்டுநர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     


    மேலும், அரசு மற்றும் அகில இந்தியா மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அனைத்து ஓட்டுநர்களையும் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிய சட்ட விதிகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை, இது குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை அரசாங்கம் திறந்த மனதுடன் பரிசீலனை செய்யும் என்று அரசு சார்பில் ஓட்டுநர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • சாஸ்திரா நதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் கர்வால் பகுதியில் உள்ளது.
    • சாஸ்திரா நதிக்கு சென்றுகொண்டிருந்த 22 டிரக்கர்கள் மோசமான வானிலையில் வழியிலேயே சிக்கிக்கொண்டனர்

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சாஸ்திரா தல் நதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் கர்வால் பகுதியில் உள்ளது. இங்கு மலையேற்றத்தை விரும்பும் டிரக்கர்கள் பயணிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று மலையேற்றத்தில் ஈடுபட்ட 9 டிரக்கர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

     

    நேற்று  சாஸ்திரா தல் நதிக்கு சென்றுகொண்டிருந்த 22 டிரக்கர்கள் மோசமான வானிலையில் வழியிலேயே தொலைந்த நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புப் படை தீவிரமாக ஈடுபட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக அந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் செல்வதற்கு வழி இல்லாததால் மீட்டுப்பணியில் தொய்வு ஏற்பட்டது.

    சிக்கிய 22 பேரில் 18 பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். மற்ற மூவர் உள்ளூர் வழிகாட்டிகள் ஆவர். இந்நிலையில் காட்டு இலாகா அதிகாரிகளுடன் நேற்று முதல் மாநில மீட்புப்படையினர் நடத்திவந்த தேடுதலில் 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

     

    ×