ஷேக் ஹசீனா விவகாரம்: பி.என்.பி. மூத்த தலைவர் சொல்வது என்ன?

ஷேக் ஹசீனா 2024 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.வங்கதேச அரசு அவரை நாடுகடத்த இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளது.
ஷேக் ஹசீனா விவகாரம்: பி.என்.பி. மூத்த தலைவர் சொல்வது என்ன?
Published on

வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

அதன்பின் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தியது. ஆனால், இந்தியா ஷேக் ஹசீனாவை நாடு கடத்தவில்லை.

இந்த நிலையில்தான் வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்று வங்கதேச தேசியவாத கட்சி (BNP) ஆட்சியை பிடித்துள்ளது. இந்த கட்சியின் மூத்த தலைவரான மிர்சா பக்ருல் இஸ்லாம், ஷேக் ஹசீனா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடதும் என்று நம்புகிறோம். இந்த விவகாரம் இருநாட்டு உறவுக்கு தடையாக இருக்காது. சர்வதேச விதிப்படி நாங்கள் இந்த விவகாரத்தில் செல்வோம். ஏற்கனவே வங்கதேசம் இந்த கோரிக்கையை இந்தியாவிடம் வைத்துள்ளது.

இவ்வாறு இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஷேக் ஹசீனா டெல்லியில் வசித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com