என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohammed Yunus"

    • 13 நாடுகளுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளது.
    • ஜனநாயக முறையிலான வங்கதேசத்தை இந்தியா என்றும் ஆதரிக்கும்.

    2024 இல் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு வங்கதேசத்தில் முதல்முறையாக கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடந்தது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது.

    இதன்மூலம் அவர் வங்கதேச பிரதமராக வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார். அன்று மதியம் நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு அழைப்பு விடுக்கப்பட்டிள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவுடன் சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மலேசியா, புருனே, இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளதாக வங்கதேச வட்டாரங்கள் தெரிவித்தன.

    முன்னதாக இந்தியப் பிரதமர் மோடியையும் மரியாதை நிமித்தம் இவ்விழாவிற்கு அழைப்போம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.என்.எம். எஹ்சானுல் ஹக் மிலன் தெரிவித்தார்.

    வங்கதேச தேர்தலில் பிஎன்பி கட்சி அமோக வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு ஏற்கனவே வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ஜனநாயக முறையிலான வங்கதேசத்தை இந்தியா என்றும் ஆதரிக்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 

    • அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
    • அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

    வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

    இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்தபின் 18 மாதங்கள் கழித்து முதல்முறையாக புதிய அரசை தேர்ந்தெடுக்க நேற்று அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடந்தது.

    இதில் 17 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு சமீபத்தில் நாடு திரும்பிய மறைந்த வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது.

    இந்நிலையில் 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 200-க்கும் மேற்பட்ட இடங்களை தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

    சுமார் 20 ஆண்டுகள் கழித்து வங்கதேசத்தில் பிஎன்பி ஆட்சி அமைய உள்ளது. தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தாரிக் ரஹ்மான்:    

    வங்கதேசத்தின் சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தின் வாரிசான தாரிக் ரஹ்மான் ஒரு காலத்தில் அந்நாட்டு அரசியலில் 'டார்க் பிரின்ஸ்' என்று அழைக்கப்பட்டார்.

    தாரிக் ரஹ்மான் தந்தை ஜியாவுர் ரஹ்மான் ராணுவ அதிகாரியாக இருந்து, பின்னர் பிடிபி கட்சியை தொடங்கி 1977 இல் வங்கதேச அதிபராக பொறுப்பேற்றார். 1981 இல் அவர் சுட்டுக் கொல்லப்படும் வரை அந்த பதவியில் இருந்தார்.

    1981 இல் ஜியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி கலீதா ஜியா வங்கதேச பிரதமராகவும் பிடிபி கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

    1991 முதல் 1996 வரையும் மற்றும் 2001 முதல் 2006 வரையும் கலீதா ஜியா பிரதமராக இருந்த காலகட்டத்தில் மகன் தாரிக் ரஹ்மான் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

    முக்கிய முடிவுகள் அனைத்தையும் அவரே எடுப்பதால்தான் நிழல் பிரதமர் என்று பொருள்படும் வகையில் அவரை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் டார்க் பிரின்ஸ் என்று அழைத்தன.

    2007 இல் ராணுவ புரட்சி ஏற்பட்டு இடைக்கால அரசு பொறுப்பேற்றபோது ஊழல், பண மோசடி மற்றும் ஷேக் ஹசீனாவை கொலை செய்ய முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தாரிக் ரஹ்மான் கைது செய்யப்பட்டார்.

    17 மாதங்கள் சிறையில் இருந்த தாரிக் ரஹ்மான் மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெற்று, சிகிச்சைக்காக பிரிட்டன் சென்றார்.

    பிரிட்டனிலேயே தஞ்சம் அடைந்து லண்டனில் வசித்து வந்த தாரிக் ரஹ்மான் சுமார் 20 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு டிசம்பரில் அவரது தாய் கலீதா ஜியா உயிரிழந்தபோது வங்கதேசம் திரும்பினார்.

    தாயின் மறைவின்பின் பிஎன்பி கட்சித் தலைவராக பொறுப்பேற்ற ரஹ்மான் மூன்று மாதங்களில் அக்கட்சியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்று ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளார்.

    ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் இருந்தும் அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

    ஷேக் ஹசீனாவுக்கு பின் அமைந்த முகமது யூனுஸ் ஆட்சியின் நிச்சயமின்மைக்கு மத்தியில் தாரிக் ரஹ்மான் வங்கதேச மக்களுக்கு புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளதை தேர்தல் முடிவுகள் தெளிவாக்குகின்றன.

    ஏழை குடும்பங்களுக்கு நிதி உதவி, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் ஆக்குவேன், 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான வங்கதேசம் உள்ளிட்ட வாக்குறுதிகளை தேர்தல் பிரசாரத்தின்போது அவர் வழங்கியிருந்தார்.

    வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தாரிக் வன்மையாகக் கண்டித்தார்.

    இதற்கிடையே 2004 அதிகாரத்தில் இருந்தபோது, இந்தியாவின் பிரிவினைவாதக் குழுவான உல்பாவுக்கு சிட்டகாங் வழியாக கப்பல் நிறைய ஆயுதங்களை அனுப்பி வைத்த வழக்கில் தாரிக் ரஹ்மானுக்குத் தொடர்பு இருப்பதாக அப்போது இந்தியா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த வங்காளதேசம் இன்று மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
    • சிறுபான்மையினரை உயிருடன் எரித்துக் கொல்வது போன்ற கொடூரமான முன்னுதாரணங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

    வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. அவர் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

    இந்த நிலையில் வங்காள தேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் மீது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டி உள்ளார்.

    சட்டவிரோதமாக அதி காரத்தை கைப்பற்றியுள்ள இடைக்கால அரசாங்கம் சிறுபான்மையினருக்கு கொடுமைகளை இழைத்து வருகிறது. ஒரு காலத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த வங்காளதேசம் இன்று மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    அனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகளைப் பின்பற்றும் சுதந்திரத்தில் யூனுஸ் அரசாங்கம் தலை யிடுகிறது. இது சிறுபான்மையினரை உயிருடன் எரித்துக் கொல்வது போன்ற கொடூரமான முன்னுதாரணங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த இருண்ட காலம் இனியும் தொடர வங்காள தேச மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

    • வங்கதேசத்தில் இடைக்கால அரசு நாளை இரவு 8 மணிக்கு பதவியேற்கிறது.
    • 84 வயதாகும் முகமது யூனஸ், 2006ம் ஆண்டில் நோபல் அமைதிப் பரிசை பெற்றார்.

    வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது இந்தியாவில் உள்ளார்.

    லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கேட்டுள்ளதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தால் லண்டனில் அடைக்கலம் புகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், வங்கதேசத்தில் முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை பதவியேற்க உள்ளதாக ராணுவத் தலைமை தளபதி அறிவித்துள்ளார்.

    பிரதமர் என்ற பதவி இல்லாமல் தலைமை ஆலோசகர் என்ற பதவியுடன் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு ஆட்சி செய்ய உள்ளது

    முகமது யூனஸ் தலைமையில் 15 உறுப்பினர்களுடன் வங்கதேசத்தில் இடைக்கால அரசு நாளை இரவு 8 மணிக்கு பதவியேற்கிறது

    84 வயதாகும் முகமது யூனஸ், ஏழை மக்களை முன்னேற்ற பொருளாதார, சமூக முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக 2006ம் ஆண்டில் நோபல் அமைதிப் பரிசை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தாக்குதல் நடைபெற்ற நிலையில், மோடியுடன் முகமது யூனுஸ் தொலைபேசியில் உரை.
    • வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு தேவை என முகமது யூனுஸ் வலியுறுத்தல்.

    வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.

    இதைதொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவி ஏற்றார்.

    வங்கதேசத்தில் இந்துகள் மற்றும் கோயில்கள் மீது தாக்குதல் நடைபெற்ற நிலையில், மோடியுடன் முகமது யூனுஸ் தொலைபேசியில் பேசியுள்ளார்.

    அப்போது, வங்கதேசத்தில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பிரதமர் மோடியிடம் முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

    அப்போது, வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து கருத்துப் பரிமாற்றம் இருந்தது. ஜனநாயக, நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு தேவை என முகமது யூனுஸ் மீண்டும் வலியுறுத்தினார்.

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு காக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை அவர் உறுதியளித்தார்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    ×