இதயம் முரளி படத்தில் இவரா? படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்..!

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.படக்குழு சார்பில் மற்றொரு அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
இதயம் முரளி படத்தில் இவரா? படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்..!
Published on

டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது திரைப்படமாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், படம் "இதயம் முரளி". இந்தப் படத்தின் டைட்டில், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தப் படம் தொடர்பான அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படக்குழு சார்பில் மற்றொரு அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இதயம் முரளி திரைப்படத்தில் பிரபல நடிகர் பகத் பாசில் நடித்துள்ளதை படக்குழு தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் அல்லது மே மாத வாக்கில் திரைக்கு வரும் என்று தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com