என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபகத் ஃபாசில்"

    • நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார்.
    • இப்படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    நடிகர் மம்மூட்டி உடல்நிலைக் காரணமாக 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதனால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார்.

    இந்த நிலையில், மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் PATRIOT படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

    இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் வடிவேலுவுடன் பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
    • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு மாரீசன் படத்தில் நடித்துள்ளார். மலையாளஇயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் வடிவேலுவுடன் பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98-வது படமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் இப்படத்திற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

    இந்நிலையில் படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் திரைப்படம் ஜூலை மாதம் திரையரங்கில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். அந்த போஸ்டரில் ஃபகத் ஃபாசில் மற்றும் வடிவேலு முகத்தில் ரத்த காயங்களுடன் ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்தபடி இருக்கின்றனர்.

    • ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம்
    • மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகியது . படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இதில் ஃபஹத் ஃபாசிலுடன் சஜின் கோபு, சிஜு சன்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரியளவில் ஹிட்டாகியது குறிப்பாக டேப்சி குரலில் இலுமினாட்டி என்ற பாடல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வந்தது.

    படத்தில் பகத் பாசில் ரீல் செய்யும் காட்சிகளை மக்கள் இன்ஸ்டாகிராமில் ரீ கிரியேட் செய்து வந்தனர். படத்தில் பகத் பாசில் முற்றிலும் மாறுபட்ட கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி சில மாதங்களுக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரியளவில் வைரலாகி வந்தது. பகத் ஃபாசிலின் கதாப்பாத்திரமான ரங்கன் சேட்டா குழந்தைகள் முதல் பெரியவர் வரை கவரப்பட்டது.

    தற்பொழுது இந்த படத்தை தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மொழியில் சூப்பர் ஸ்டாரான பாலய்யா , ரங்கன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகின்றது.

    இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியைடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது.
    • புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்படும் .

    நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. நடிகர் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 6 ஆம் தேதி-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஃபகத் ஃபாசிலிற்கு வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஃபகத் ஃபாசில் புஷ்பா திரைப்படத்தில் பன்வர் சிங் ஷேகாவத் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். போஸ்டரில் லுங்கி அணிந்துக் கொண்டு ஒரு கையில் கோடாரியும் மற்றொரு கையில் துப்பாகியுடன் மிகவும் மாஸான லுக்கில் காணப்படுகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×