அதர்வா நடித்த தணல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தணல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதர்வா நடித்த தணல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Published on

2010-ஆம் ஆண்டு வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த 'பரதேசி', 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான டி.என் ஏ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தணல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நிலையில் திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தமிழில் பிரம்மன், மாயவன் போன்ற படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி இணைந்துள்ளார். அன்னை பிலிம் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஷா ரா, செல்வா, பரணி, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லட்சுமி பிரியா, பாரத், மற்றும் பலர் நடித்துள்ளனர். சக்தி சரவணன் ஒளிப்பதிவை மேற்கொள்ள் கலைவாணன் படத்தொகுப்பை செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com