என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கருப்பி உயிரிழப்பு
    X

    பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த "கருப்பி" உயிரிழப்பு

    • கருப்பி என்ற பெயரில் சிப்பிப் பாறை வகை இனத்தை சேர்ந்த நாய் நடித்துள்ளது.
    • பரியேறும் பெருமாள் பட ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள்.

    சாதிய கொடுமைகளையும் அது எவ்வாறு மறைமுகமாக செயல்படுகிறது என்பதையும் ஒரு கல்லூரி காதல் கதை மூலம் அப்பட்டமாக கூறியிருப்பார் மாரி செல்வராஜ்.

    இந்த படத்தில் கருப்பி என்ற பெயரில் சிப்பிப் பாறை வகை இனத்தை சேர்ந்த நாய் நடித்துள்ளது. அந்த படத்தில் கருப்பி நாய் இறந்துவிடும். அதற்கென தனி ஒப்பாரி பாடல் படத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த பாடல் பிரபலமானது.

    இந்நிலையில், நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பட்டாசு வெடித்த சத்தத்தை கேட்டு தெறித்து ஓடிய கருப்பி நாய் சாலையில் வந்த வண்டி மீது மோதி உயிரிழந்துள்ளது.

    இந்த சம்பவம், பரியேறும் பெருமாள் பட ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×