என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "adharva"
- புறநானூறு படத்தின் மூலம் ஸ்ரீலீலா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
- புறநானூறு படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க திட்டம்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி 'புறநானூறு' படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் என கூறப்பட்டது.
கால்ஷீட் தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியில் சுதா கொங்கரா உடன் 'புறநானூறு' படத்தில் நடிகர் சூர்யா இணைவது கேள்விக்குறியானது. இந்த நிலையில் சூர்யாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை புறநானூறு படத்தில் நடிக்க வைக்க சுதா கொங்கரா முடிவெடுத்தார்.
இப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் ஏற்கனவெ வெளிவந்தது. தொடர்ந்து படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீலீலா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
இந்நிலையில், புறநானூறு படத்தில் மேலும் இரண்டு பிரபலங்கள் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் அதர்வா சிவகார்த்திகேயனின் தம்பியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரபல மலையாள நடிகர் ரோஷன் மாத்தியூ வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புறநானூறு படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- இயக்குனர் விஷ்ணு வர்தன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', 'பில்லா' மற்றும் 'ஆரம்பம்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணு வர்தன் கடைசியாக 'ஷெர்ஷா' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். அப்படம் தேசிய விருதையும் வென்றது. தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார்.
மேலும், சரத் குமார், பிரபு கணேசன், குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
ரொமான்டிக் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
- இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நிறங்கள் மூன்று'.
- இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் விரைவில் 'நிறங்கள் மூன்று' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'டிரிக்கர்'.
- இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'டிரிக்கர்'. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அருண் பாண்டியன், சீதா, முனீஸ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'டிரிக்கர்' படத்திற்கு இயக்குனர் பிஎஸ் மித்ரன் வசனம் எழுதியுள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'டிரிக்கர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'டிரிக்கர்' திரைப்படம் செப்டம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்