கதாநாயகனாக அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி

இயக்குனர் விஷ்ணு வர்தன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கதாநாயகனாக அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி
Published on

'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', 'பில்லா' மற்றும் 'ஆரம்பம்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணு வர்தன் கடைசியாக 'ஷெர்ஷா' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். அப்படம் தேசிய விருதையும் வென்றது. தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார்.

மேலும், சரத் குமார், பிரபு கணேசன், குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

ரொமான்டிக் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com